கேரள மாநிலம் மலபார் காயல் நல மன்றம் (மக்வா) அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் காயலர்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் செய்தி தொடர்பாளர் எஸ்.என்.மீரான் வெளியிட்டுள்ள அறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் எமது மலபார் காயல் நல மன்றத்தின் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி, 26.06.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை, கேரள மாநிலம் - கோழிக்கோடு கல்லாய் ரோட்டில் அமைந்துள்ள சினேகாஞ்சலி கம்யூனிட்டி ஹாலில், எமது அமைப்பின் தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
துவக்க நிகழ்வுகள்:
அரங்க நிகழ்ச்சிக்கு, மன்றத் தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். மன்றத்தின் துணைத் தலைவர் உதுமான் அப்துல் ராசிக் செயலாளர் முகைதீன் அப்துல் காதர், துணைச் செயலாளர் சிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் உஸ்மான் லிம்ரா அவர்கள் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர் மகபூ ஃப் சுப்ஹானி அவர்களுடைய மகனார் அபுபக்கர் சுஃப்யான் இறைமறையை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
வரவேற்புரை:
நிகழ்வுகளில் பங்கேற்க வந்திருந்த மன்ற உறுப்பினர்களையும், அவர்கள்தம் குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்களையும், மன்ற செயற்குழு உறுப்பினர் கண்ணூர் செய்யது இஃப்ராஹிம் அவர்கள் மன்றத்தின் சார்பில் வரவேற்றுப் பேசினார்.
மழலையரின் மனமகிழ் நிகழ்ச்சி: மழழைகள் மொழியில் மலபார் மழைகள் சற்று ஓய்வு எடுத்தன.... நோன்பு துறக்க நேரம் நெருங்குவது தெரியாமல் மன்றம் குழந்தைகள் பேச்சால் மூழ்கியது.....
சிறுவர்-சிறுமியருக்கான இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. கலந்துகொண்ட அனைத்து குழந்தைகளும் தமது திறமைகளை அழகுற வெளிக்காட்டி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தனர். மாஷா அல்லாஹ்...
மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவளார்களின் பிள்ளைகள் 3 வயதில் இருந்து 12 வயது வரையான 30 குழந்தைகள், மேடையில் அவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் ஒன்றாக அமர்ந்திருப்பதை பார்க்கும் போது கண்ணுக்கு விருந்தாகவும்,
அவர்கள் மழளைக் குரலில் அவர்கள் திறமையை வெளிப்படுத்தும் வித்தை கேட்க்கும் பொழுது செவிகளுக்கு இதமாகவும் மொத்தத்தில் அனைவர்கள் மனதையும் கொள்ளை கொள்ளும் விதமாக இருந்தது.
அல்ஹம்துலில்லாஹ் யுனைடட் ஜலீல் காக்கா, ஜாவித் நஸீம், முகம்மது ஹுஸைன், சேக் அப்துல் காதர், மொஹீதும் ஆதில் இவர்கள் அனைவரும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பரிசுகளை வழங்கினார்.
சாதனை மாணவ மானவியருக்கு பரிசு:
SSLC தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மன்ற துணைச் செயலாளர் முஹம்மது சிராஜ் அவர்களின் மகனார் M.S. சல்மான் ஷாஹித் அவர்களுக்கும், பொதுக்குழு உறுப்பினர் பாதுல் அஸ்ஹப் அவர்களின் சகோதரி S.A .யாஸ்மின் இஜ்ஜத் அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றமைக்காக உறுப்பினர் அபுதாஹிர் அவர்களின் மகளார் A.T. முகத்தஸா , உறுப்பினர்கிதுரு முகைதீன் தர்வேஷ் அவர்களின் மகளார் KM.T. ஆயிஷா முஃப்லிகா, செயற்குழு உறுப்பினர் தாவூத் நெய்னா அவர்களின் மகனார் D.N. முஹம்மது அப்துல் காதர், உறுப்பினர் அப்துர் ரஹ்மான் அவர்களின் சகோதரர் MM முஹம்மது ஃபாயிஜ், உறுப்பினர் நூருல் அமீன் அவர்களின் மகளாருக்கும் சிறப்புபரிசு வழங்கப்பட்டது...
தலைமையுரை:
கூட்டத் தலைவரும் - மன்றத் தலைவருமான ரஹ்மத்துல்லாஹ் தலைமையுரையாற்றினார்.
மருத்துவ உதவி மக்வா இறையருளால் நிறைவாகச் செய்து வருவதாகக் கூறிய அவர், உலக காயல் நல மன்றங்களின் மருத்துவ உதவிக் கூட்டமைப்பான ஷிஃபா மூலம் பயனாளிகளுக்கு நம் மன்றம் தேவையான உதவிகளை வழங்கி வருவதாக கூறினார்.மேலும் ஷிஃபாவின் செய்லபாடுகளை வெகுவாக பாராட்டினார். மேலும் மக்வாவின் உறுப்பினர்கள் அனைவரின் சிறப்பான பங்களிப்பை அவர் வெகுவாக பாராட்டினார்..
இஃப்தார் - நோன்பு துறப்பு:
கூட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து, அரங்கில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிக்கு அனைவரும் அழைக்கப்பட்டனர். அங்கு பேரீத்தம்பழம், காயல் கஞ்சி பருப்புவடை என உணவு ஏற்பாட்டுக் குழுவினரால் விமரிசையாகவும், சுவைபடவும் உணவுப் பதார்த்தங்கள் ஆயத்தம் செய்யப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
மஃரிப் தொழுகை:
இஃப்தார் நிறைவுக்குப் பின், மஃரிப் தொழுகை ஜமாஅத்துடன் (கூட்டாக) தொழப்பட்டது. துணை செயலாளர் சகோதரர் முகம்மது சிராஜ் தொழுகையை வழிநடத்தினார்.
அதனைத் தொடர்ந்து கூட்டத்தின் இரண்டாம் அமர்வு நடைபெற்றது. துவக்கமாக அனைவருக்கும் சுவையான தேனீர் வழங்கப்பட்டது.
செயலர் சுருக்கவுரை:
அடுத்து, மன்றச் செயலாளர் N. M.அப்துல் காதர் உரையாற்றினார். அவர் தனது உரையில் மக்வாவின் செயல்பாடு குறித்தும் நோயற்ற வாழ்வு நாம் வாழ செய்ய வேண்டிய மிக முக்கியமான செயல்பாடுகள் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார்.
வாழ்த்துரை:
செயற்குழு உறுப்பினர் உஸ்மான் லிம்ரா ஜனாப் சாளை அபுல் ஹசன், மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ஜனாப் ஆதில் மொஹிதும் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விருந்தோம்பல்:
பின்னர், இரவு உணவுக்காக அனைவரும் அழைக்கப்பட்டனர். அங்கு, இடியாப்ப பிரியாணி மற்றும் கேரட் அல்வா அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
நன்றியுரை:
நிறைவாக மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஜனாப் மஸ்ஊத் நன்றி கூற, கஃப்ஃபாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டம், இஃப்தார் - நோன்பு துறப்பு, இரவுணவு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும், மன்ற அங்கத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். இரவு 08.30 மணியளவில், அனைவரும் தத்தம் வசிப்பிடம் திரும்பினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்வா சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மக்வா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|