காயல்பட்டினம் பரிமார் தெரு கடைப்பள்ளிவாசல் சுற்றுவட்டாரம், சுலைமான் நகர் (மாட்டுக் குளம்) பகுதிகளைச் சேர்ந்த 85 ஏழைக் குடும்பங்களுக்கு, அப்பள்ளி நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் PWA (Parimar Welfar Association) பரிமார் நல மன்றம் சார்பில் ஃபித்ரா அரிசி & நோன்புப் பெருநாளுக்குத் தேவையான சமையல் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பொதியிலும் - அரிசி, சமையல் எண்ணெய், நெய், சீனி, ஜவ்வரிசி, தேங்காய், பட்டை கருவா, ஏலக்காய், மசாலா தூள் ஆகிய சமையல் பொருட்கள் உள்ளடக்கம்.
பரிமார் நல மன்ற நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ததோடு, அவர்களே பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று பொருட்களை வழங்கினர்.
தகவல் & படங்கள்:
பரிமார் நல மன்றம் சார்பில்...
தவ்ஃபீக்
பரிமார் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|