நோன்புப் பெருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் ஏழை மக்களுக்கான ஃபித்ரா உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி 03.07.2016. ஞாயிற்றுக்கிழமையன்று, 19.30 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.லெப்பைத்தம்பி சாலையில் அமைந்துள்ள தமுமுக நகர கிளை அலுவலகத்தில் வினியோகிக்கப்பட்டது.
அரசி 2 கிலோ, மைதா அரை கிலோ, சீனி அரை கிலோ, எண்ணெய் அரை லிட்டர், நெய் 100 கிராம், ஜவ்வரிசி 100 கிராம், தேங்காய் 1 - ஆகிய சமையல் பொருட்கள் அடங்கிய பொதி, 200 ஏழைக் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
எஸ்.எம்.ரஃபீ அஹ்மத் (எல்.கே.எஸ்.) தலைமை தாங்கினார். காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ வினியோகத்தைத் துவக்கி வைத்தார்.
நகரப் பிரமுகர்களான எஸ்.இப்னு ஸஊத், அஹ்மத் கபீர், தமுமுக, மமக, இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை (IPP) மாவட்ட - நகர நிர்வாகிகளான கே.முஹ்ஸின் முர்ஷித், எம்.ஐ.ஏ.காதிர் ஜாஹிர் ஹுஸைன், ஐதுரூஸ், ஹஸன், இப்றாஹீம், ஷம்சுத்தீன், யூஸுஃப், ரஃபீக், ரியாஸ், இஸ்மாஈல், மவ்ஜூத், அப்துர்ரஹீம், ஷாஹுல் ஹமீத், அல்தாஃப், முஜீபுர்ரஹ்மான், இஸ்மாஈல் ஆகியோரும், வார்டு நிர்வாகிகளும் கலந்துகொண்டு, ஏழைகளுக்கு உணவுப் பொதிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், தமுமுக - மமக மாவட்ட, நகர நிர்வாகிகளும், அங்கத்தினரும் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
K.முஹ்ஸின்
(முர்ஷித் டிஜிட்டல் ஜெராக்ஸ்)
தமுமுக காயல்பட்டினம் நகர கிளை சார்பில், கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) நடத்தப்பட்ட ஃபித்ரா உணவுப் பொருட்கள் வினியோகம் குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தமுமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |