காயல்பட்டினம் ஹாஃபிழ் அமீர் வலிய்யுல்லாஹ் பள்ளியில் ஆண்டுதோறும் ரமழான் மாதத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்:
நடப்பாண்டில், 25.07.2016. அன்று பதிவு செய்யப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள் வருமாறு:-
இஃப்தார் நிகழ்ச்சியில் நாள்தோறும் 30 முதல் 50 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு, பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, வடை உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது. வெண்கஞ்சி அரிதாகிப் போன இக்காலகட்டத்திலும், இப்பள்ளியில் வெண்கஞ்சியும், கறிகஞ்சியும் மாற்றி மாற்றி தயாரிக்கப்படுகிறது. நடப்பாண்டில் இப்பள்ளியில் தயாரிக்கப்படும் வெண்கஞ்சி, வழமையான வெண்கஞ்சிகளின் சுவையிலிருந்து பெரிதும் மாறுபட்டுள்ளது. மருத்துவ குணம் கொண்ட சில பொருட்கள் கூடுதலாக சேர்க்கப்படுவதே அதற்குக் காரணமாகும்.
நிர்வாகிகள்:
இப்பள்ளியில், ஹாஜி அஹ்மத் முஹ்யித்தீன் என்ற கோப்பி ஹாஜியார் தலைமையில், செயலாளர் ஜின்னா, பீர் கான், எம்.கே.ஷாஹுல் ஹமீத், ஓ.இ.மொகுதூம் ஆகியோரை இணைச் செயலாளர்களாகக் கொண்டு, இப்பள்ளி நிர்வாகம் இயங்கி வருகிறது.
இமாம் - முஅத்தின் - தராவீஹ் இமாம்:
காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சேர்ந்த மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.ஜாஸிர் மஹ்ழரீ பள்ளியின் இமாமாகவும், மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த ஏ.ஏ.ஜியாத் முஅத்தினாகவும் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் ரமழான் தராவீஹ் தொழுகையில் முழு குர்ஆனும் ஓதி முடிக்கப்படுகிறது.
ஹாஃபிழ் அமீர் வலிய்யுல்லாஹ் பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாஃபிழ் அமீர் வலிய்யுல்லாஹ் பள்ளியின் வரலாற்றுத் தகவல்கள் உள்ளிட்ட விபரங்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாஃபிழ் அமீர் வலிய்யுல்லாஹ் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு இஃப்தார் நிகழ்ச்சிகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|