உலகில் எங்கு பிறை காணப்பட்டாலும் அதனடிப்படையில் முடிவெடுக்கலாம் என்ற கருத்தின் அடிப்படையில் காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நோன்பு, பெருநாள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
நேற்றிரவு (ஜூலை 04) ஷவ்வால் தலைப்பிறை பார்க்கப்பட்ட தகவல்கள் எங்கிருந்தும் கிடைக்கப்பெறாததால், ரமழான் மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்தி செய்யுமாறு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி, இன்று பெருநாள் இரவு என்றும், நாளை (ஜூலை 06 புதன்கிழமை) ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெருநாள் தொழுகை குறித்து பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:-
நாளை (06.07.2016. புதன்கிழமை) காலை 07.30 மணிக்கு, காயல்பட்டினம் கடற்கரையில் பெருநாள் தொழுகை நடத்தப்படவுள்ளது. அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் இமாம் ஏ.எஸ்.நெய்னா முஹம்மத் பெருநாள் தொழுகையை வழிநடத்தவுள்ளார். அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ குத்பா உரையாற்றவுள்ளார்.
தொழுகைக்கு வரக்கூடிய பொதுமக்களுக்காக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இயன்றளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனினும், நீங்கள் வரும்போது தொழுவதற்கான விரிப்புகளைக் கொண்டு வந்து ஒத்துழைக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாளை நடைபெறவுள்ள பெருநாள் தொழுகை, DHL Broadband நிறுவனத்தின் சார்பில் இணையதளத்தில் நேரலை செய்யப்படவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு:-
தகவல்:
K.S.முஹம்மத் யூனுஸ் & அஹ்மத் இஸ்மாஈல்
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் நோன்புப் பெருநாள் அறிவிப்பு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அல்ஜாமிஉல் ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 22:20 / 05.07.2016.]
|