தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், நகரின் 440 ஏழைக் குடும்பங்களுக்கு நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஃபித்ரா உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
நகர கிளை பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட 1 லட்சத்து 16 ஆயிரத்து 850 ரூபாய் தொகையையும், அதன் தலைமையகத்திலிருந்து பெறப்பட்ட 29 ஆயிரத்து 600 ரூபாய் தொகையையும் இணைத்து, மொத்தமத் 1 லட்சத்து 46 ஆயிரத்து 450 ரூபாய் மதிப்பில், நோன்புப் பெருநாளுக்குத் தேவையான அரிசி, பருப்பு, சீனி, நெய், மைதா, ரவை, சேமியா, வத்தல் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் ஆகிய சமையல் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு, காயல்பட்டினத்தைச் சேர்ந்த 440 ஏழைக் குடும்பங்களுக்கு அப்பொருட்கள் இலவசமாக - நேரடியாகச் சென்று வினியோகிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை, நகர கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) ஃபித்ரா வினியோகம் செய்யப்பட்டமை குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |