Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:15:24 AM
புதன் | 22 மே 2024 | துல்ஹஜ் 1756, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4012:2003:4206:3507:48
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:58Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்17:32
மறைவு18:31மறைவு04:43
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4205:0905:35
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5319:1919:46
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18060
#KOTW18060
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுலை 5, 2016
ஜூலை 06 புதன்கிழமை ரமழான் 30! ஜூலை 07 வியாழக்கிழமை நோன்புப் பெருநாள்!! மஹ்ழரா - ஜாவியா உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3199 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஷவ்வால் தலைப்பிறை காணப்பட்ட தகவல் கிடைக்கப் பெறாததால், ஜூலை 06 புதன்கிழமையன்று ரமழான் 30 என்றும், ஜூலை 07 வியாழக்கிழமையன்று ஷவ்வால் 01 (நோன்புப் பெருநாள்) என்றும், மஹ்ழராவில் இன்று நடைபெற்ற மஹ்ழரா - ஜாவியா உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீயும், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.டீ.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் - மஹ்ழரா அரபிக் கல்லூரி, ஜாவியா அரபிக் கல்லூரி & காயல்பட்டினம் நகர உலமாக்கள் (மார்க்க அறிஞர்கள்) கலந்துகொண்டனர்.“அறிவிப்பு என்ன” என்பதை அறிவதற்காக, நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மஹ்ழரா வளாகத்தில் திரளாகக் குழுமியிருந்தனர்.கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) ஜாவியாவில் நடைபெற்ற உலமாக்கள் கூட்டுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

மஹ்ழரா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

ஜாவியா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஊர் கட்டுப்பாடு ,,,,
posted by mackie noohuthambi (kayalpatnam ) [05 July 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44220

ஊர் கட்டுப்பாடு என்று வெளியூர்களில் ஒரு பழக்கம் வழக்கம் உண்டு.என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அது வெளிப்படையாக பேசப்பட்டு கடைசியில் ஒரு முடிவுக்கு வருவார்கள். அதில் சிலருக்கு உடன்பாடு இருக்காது. இருந்தாலும் ஊர் கட்டுப்பாடு கண்ணியம் காக்க வேண்டும் என்று அதனை ஏற்றுக் கொள்வார்கள். இப்போதும் அது நடை முறையில் இருக்கிறது.

ஆனால் உலமாக்கள் நிறைந்த நமதூரில் அப்படி ஒரு அணுகுமுறை இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை. ஆனாலும் அதை ஜீரணித்துக் கொள்ள உள்வாங்கி கொள்ள பொறுமையுடன் அதனை ஏற்றுக் கொள்ள நாம் பழகி விட்டோம் எனவே வேற்றுமையிலும் ஒற்றுமை நம்மிடம் ஒரு வாழ்வியலாகவே அமைந்து விட்டது. நோன்பு, பெருநாள் என்று வந்து விட்டாலே இந்த பிறை படும் பாடு சொல்லி மாளாது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமை செயலகம் என்ன அறிவுப்பு செய்கிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் அந்த அமைப்பில் உள்ளவர்கள். JAHQ என்ற அமைப்பின் தலைமை சொல்லும் அறிவிப்பை அமுல்படுத்துவார்கள் அந்த அமைப்பில் உள்ளவர்கள். அதே போல் சுன்னத் வல் ஜமாத் அமைப்பில் உள்ளவர்கள் அந்த தலைமை சொல்வதை ஏற்றுக் கொள்வார்கள். இதில் அங்கம் வகிக்கும் பாமர மக்கள் படித்தவர்கள் சொல்வதைவிட அந்த அமைப்பில் உள்ள உலமாக்கள் குர் ஆன் ஹதீத்படி தீர்ப்பளிப்பதாக சொல்வார்கள். அந்த குறிப்புகளையும் நேர்த்தியாக எடுத்து வைப்பார்கள். எனவே இதில் யாரையும் குற்றம் குறை சொல்வதோ நீ சொல்வது சரி நான் சொல்வது சரி என்று வாதிடுவதற்கோ அவசியம் இல்லை. சர்ச்சைகளை தவிர்த்து நிதர்சன உண்மைகளை ஏற்றுக் கொண்டு நமது பெருநாளை அணுகுவோம்.

நோன்பு, பெருநாள் இவற்றின் நல் அமல்களை கண்காணிப்பவன் அதில் சரி தவறு கண்டுபிடிப்பவன் அதற்கான கூலிகளை குறைப்பவன் நிறைவாக தருபவன் நமது பாவங்களை மன்னிப்பவன் எல்லாமே சர்வ வல்லமையுள்ள அல்லாஹ் ஒருவனே.

எனவே குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்ந்து கொண்டு கணினியில் பிறை கண்டு அறிவிப்பதை தவிர பிறை கண்டு நோன்பு வைப்பது, பிறை கண்டு பெருநாள் கொண்டாடுவது என்ற ஒரு நிலை இருந்தால் அது ஏற்புடையதுதான். .

காயல்பட்டினத்தில் இருந்து எத்தனை மைல் தொலைவில் வான் வழியோ கடல் வழியோ தரை வழியோ பிறை தென்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளலாம் என்ற தெளிவான தகவல் மட்டும் இன்னும் என்னைப் போன்ற சாமானியர்களை வந்து அடையவில்லை. மற்றப் படி சுன்னத் ஜமாத் உலமாக்கள் ஒருங்கிணைந்து கூட்டறிக்கை அளித்துள்ளதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். ஆளுக்காள் பேச ஆரம்பித்தால் உலமாக்கள் நம்மை விட்டு விலகி விடுவார்கள். நீங்களாக பார்த்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடுவார்கள். உலமாக்களின் கூட்டறிக்கையை ஏற்றுக் கொண்டு நாம் செயல்பட்டால் அதில் ஏற்படும் குறை நிறைகளுக்கு அவர்களே அல்லாஹ்விடம் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்கள்.எனவே அவர்கள் மிக பய பக்தியுடன் அல்லாஹ்வுக்கு பயந்து எடுத்துள்ள முடிவை நாம் ஏற்றுக் கொண்டு இன்றைய நாளை நோன்பு நாளாக அனுசரித்து நமது பெருநாளை கொண்டாடுவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த புனித ரமலானில் நாம் செய்த வணக்கங்களை ஏற்று கொள்வானாக நமது பாவங்களை மன்னித்துக் கொள்வானாக. நம் எல்லோரது இம்மை மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாக,

எல்லோருக்கும் எனது இதயம் நிறைந்த ஈகை திருநாள் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...A BILLION DOLLAR QUESTION
posted by mackie noohuthambi (kayalpatnam ) [06 July 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44221

நேற்றிரவு தராவீஹ் தொழுகை நடந்து முடிந்த பிறகு என்னருகில் ஒருவர் வந்து அமர்ந்தார். அவர் எனக்கு நன்கு பழக்கப் பட்டவர். ஜித்தாவில் ஒரு மருத்துவமனையில் பிரபல மருத்துவராக விளங்கியவர்.

காக்கா நான் உங்களிடம் ஒரு செய்தி கேட்கவேண்டும்.உங்கள் வாப்பா மக்கி ஆலிம்ஸா, செய்தாலிம்ஸா எல்லோரும் இருந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம். அப்போதெல்லாம் ரமலான், பெருநாள் என்றெல்லாம் வந்திருக்கிறது. இலங்கையில் பெருநாள் என்றால் நமது ஊரிலும் பெருநாள் என்று முடிவு செய்து பெருநாள் கொண்டாடி இருக்கிறோம், உங்களுக்கு அந்த நாள்கள் நினைவிருக்கிறதா....ஆஹா ஏதோ வில்லங்கம் வருகிறதோ

என் தந்தை தானே ஆலிம், நான் சாதாரண ஆள்தான் இவர் என்ன கேட்கப்போகிறாரோ தெரியவில்லையே என்று கேள்விகளை எதிர்நோக்கி இருந்தேன்....

ஆம் .சொல்லுங்கள், காக்கா இன்று இரவு இலங்கையில் பல இடங்களிலும் பிறை பார்த்ததாக ஒரு லிஸ்ட் வந்திருக்கிறது, அங்கும் சட்டப் படி பெருநாள் அறிவித்து விட்டார்கள். நமது ஊரில் மட்டும் ஏன் நோன்பு என்றுஅறிவித்திருக்கிறார்கள்..

ஒரு காலத்தில் அப்படி இருந்தது அதன் பிறகு மாற்றி விட்டார்கள். குறிப்பிட்ட தொலைவில் பிறை கண்டால்தான் இங்கு அதை ஒப்புக் கொள்வார்கள் என்றேன்.

அப்படியானால் உங்க வாப்பா செய்தாலிம்ஸா எல்லோரும் செய்தது தப்பா....ஷரியத் கால மாற்றங்களுக்கு உள்பட்டதா என்று கேட்டார்.

தயவு செய்து இந்த பெரிய கேள்விகளை மஹ்லறா ஜாவியா உலமாக்களை சந்தித்து கேளுங்கள் உங்களை போல் எனக்கும் அந்த சந்தேகம் நீண்ட நாட்களாக இருக்கிறது. இருந்தாலும் ஊர் ஒற்றுமை கருதி அவைகளை நான் வெளியில் பேசுவதில்லை. யாரும் எப்போதும் பெருநாள் கொண்டாடலாம். இப்போதும் உங்களை யார் வேண்டாம் என்றார்கள் சிறப்பாக கொண்டாடுங்களேன் என்றுதான் பதில் வருமே தவிர நியாயமான பொருத்தமான பதில் வராது என்றேன்.

சில கேள்விகளுக்கு பதில் இல்லை, சில நோய்களுக்கு மருந்தில்லை,கால போக்கில் அது சரியாகி விடும். TIME IS THE BEST HEALER .

மருத்துவர் புன்னகைத்தார். ஆம் மருத்துவர்களுக்கும் கூட சில நோய்களுக்கு மருந்து தெரியாது சிகிச்சையும் பலனளிக்காமல் போகும்போது அவர்கள் சொல்லும் வார்த்தை...

GOD ONLY KNOWS ...

ஆம் இப்போது அவருக்கு நாம் சொல்லும் வார்த்தை

ALLAAH ONLY KNOWS .. IT IS A BILLION DOLLAR QUESTION .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by fareed (Dubai) [06 July 2016]
IP: 112.*.*.* Indonesia | Comment Reference Number: 44222

Assalammu Alaikkum

Really sad news.people's witnessed the moon sighting.Really this aalims will answer to Allah for guiding common people's wrongly

We should not accept their decision after moon sighting proof provided properly

Really they are aalims and fear about allah or fear about kaji / government

Regards
Fareed

Dear admin
Pls post my comments with out editing


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...உணர்வுகளை காயப் படுத்தாதீர்கள்
posted by mackie noohuthambi (kayalpatnam ) [06 July 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44225

சகோதரர் பரீத் அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.

ஆங்கிலத்தில் எழுதினால் தமிழ் அர்த்தம் புரியாது என்று எழுதுகிறீர்களா அல்லது உள்ளபடியே உலமாக்கள் உள்ளங்களை காய படுத்தும் நோக்கில் உங்கள் நினைவுகளை இங்கு பதிவு செய்கிறீர்களா என்று தெரியவில்லை

THERE IS MORE HEAT THAN LIGHT IN YOUR COMMENTS .

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. நீங்கள் துபாயில் இருந்து கொண்டு வாட்ஸுப்பில் வரும் தகல்வல்களை நம்பி இப்படி பதிவு செய்திருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். ஊரில் நடந்தது என்ன பெருநாள் தினம் ஏன் வெவ்வேறு தினங்களில் அனுஷ்டிக்கப் படுகிறது என்பதை கொஞ்சம் நிதானமாக உட்கார்ந்து யோசியுங்கள்.

உங்களுக்கு சரியான விளக்கம் வேண்டுமானால் மஹ்லறா ஜாவியா நிர்வாகங்களை தொலைபேசி மூலம் அணுகி கேட்டால் விவரம் சொல்வார்கள். ஒரு தலைப் பட்சமாக விமர்சனங்கள் பதிவு செய்வது உங்கள் பெருந்தன்மையை கேள்விக்கு குறியாக்கி விடும்.இந்த இணையதளத்தை உலகின் எல்லா பகுதியிலிருந்தும் பார்ப்பார்கள். நாம் யாரை ஆதரித்து பேசினாலும் எதிர்த்து பேசினாலும் நமது பேனா முனையால் அவர்களை காயப் படுத்தக் கூடாது இனிமையாக எழுதலாம் பேசலாம் வாதாடலாம்.உங்களுக்கு தெரியாத விஷயம் அல்ல இது.

நான் இந்த விமர்சனத்தை படித்தபோது எனக்கு தெரிந்த சில ஆங்கில அறிவை வைத்து உணர்ந்தேன் இது உலமாக்கள் உணர்வுகளை காயப் படுத்துகிறது. அல்லாஹ் நம் எல்லோரையும் மன்னிப்பானாக.

இந்த புனித பெருநாள் பறக்கத்தால் நமது எழுத்தாலோ பேச்சாலோ மற்றவர்கள் உணர்வுகள் காயப் படாமல் நம்மை காப்பாற்றுவானாக.தவறாக நான் ஏதும் குறிப்பிட்டிருந்தால் என்னை மன்னித்து கொள்ளுங்கள்.

AL MUSLIMU MANN SALIMAL MUSLIMOONA MIN LISAANIHEE VA YADHIHEE ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வதந்திகளைப் பரப்புவது பாவம்!!!
posted by S.K.Salih (Kayalpatnam) [06 July 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 44226

வாட்ஸ் அப் மூலம் நமதூர் காயல்பட்டினம் நகர பொதுமக்களுக்கு அடியேன் தெரிவித்த தகவல்களை இங்கும் பகிர்ந்துகொள்கிறேன்...

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்!

காயல்பட்டினத்திலிருந்து எஸ்.கே.ஸாலிஹ்!!

நமதூர் காயல்பட்டினத்தில் இன்றும் (ஜூலை 06 புதன்கிழமை), நாளையும் (ஜூலை 07 வியாழக்கிழமை) ஆகிய இரு நாட்களில் இரு சாராரால் பெருநாள் கொண்டாடப்படுகிறது. அது அவரவர் கோட்பாடுகளைப் பொருத்தது. அதில் தலையிட எனக்கு எந்தத் தகுதியுமில்லை.

ஆனால், நேற்று மஹ்ழரா - ஜாவியா & நகர உலமாக்களின் - ஷவ்வால் தலைப்பிறை தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சிறிதும் ஆராயாமல், அதற்கான எந்த முயற்சியையும் எடுக்காமல் பல்வேறு உண்மையற்ற தகவல்கள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வழியே பரப்பபட்டு வருவதோடு, அடியேன் சார்ந்துள்ள www.kayalpatnam.com இணையதளத்தில் வெளியிடப்பட்ட அதுகுறித்த செய்தி(http://www.kayalpatnam.com/shownews.asp?id=18060)யின் கீழும் கருத்துப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அக்கூட்டத்தின் துவக்கம் முதல், கூட்டம் நிறைவுற்று அனைவரும் கலைந்து செல்லும் வரை அங்கிருந்தவன் என்ற அடிப்படையில், பரப்பப்படும் விமர்சனங்கள் தொடர்பான எனது மனப்பதிவுகள் சிலவற்றைப் பணிவுடன் முன்வைக்கிறேன்...

“ஒரு கொள்கை சார்ந்தவன்” என்ற நிலையில் எனது இப்பதிவைப் பரிசீலிக்காமல், “எக்கருத்தையும் சாராத ஒரு செய்தியாளன்” என்று கருதி படித்தால் மட்டுமே இதை விளங்க இயலும் என்ற முன் தகவலோடு துவக்குகிறேன்...

(1) விமர்சனம்:

இவர்கள் தமிழக அரசின் தலைமை காழீ என்ன முடிவை அறிவிக்கிறாரோ, அதை அப்படியே இங்கு அறிவிப்பார்கள். அம்முடிவு தவறாக இருந்தாலும் சரியே!

விளக்கம்:

கடந்த சுமார் 6 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ரமழான் தலைப்பிறை, ஷவ்வால் தலைப்பிறை தொடர்பாக நடைபெறும் மஹ்ழரா - ஜாவியா & நகர உலமாக்களின் கலந்தாலோசனைக் கூட்டுக் கூட்டத்தில் ஒரு செய்தியாளனாகக் கலந்துகொண்டிருக்கிறேன். தலைப்பிறை பார்க்கப்படவில்லை என சென்னை தலைமை காழீ பெருநாள் அல்லது நோன்பு தலைப்பிறை குறித்து அறிவித்த சில அறிவிப்புகளுக்கு மாற்றமாக, தலைப்பிறை பார்க்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்ற நேரங்களில் அதனடிப்படையில் மட்டுமே அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள்.

(2) விமர்சனம்:

தம் கொள்கையைச் சாராதவர்களின் தகவல்களைக் கண்டுகொள்வதேயில்லை.

விளக்கம்:

கலந்தாலோசனைக் கூட்டத்தின்போது தகவல்கள் - அவை யாரிடமிருந்து பெறப்பட்டாலும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில், சந்தேகத்திற்கிடமளிக்கும் தகவல்கள் பெறப்பட்டால், எங்கிருந்து பிறை பார்க்கப்பட்டதாக தகவல் பெறப்பட்டதோ அப்பகுதியிலுள்ள ஜமாஅத்துல் உலமா சபைக்குத் தொடர்புகொண்டு தகவலை உறுதி செய்த பின்பே அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

05.07.2016. செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்திலும், தம் கொள்கையைச் சாராத சிலர் கன்னியாகுமரி அருகே பிறை பார்த்ததாக தகவல் பெறப்பட்டது. அது மாற்றுக்கொள்கையினரின் தகவல் என்று கண்ணை மூடிக்கொண்டு புறக்கணிக்காமல், அதன் உண்மை நிலை குறித்து குமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையிடம் அத்தகவலை உறுதி செய்யக் கோரப்பட்டது. அவர்கள் முயற்சித்த பின், உறுதி செய்ய இயலவில்லை என்று தகவல் தந்த பின்பே அது நிராகரிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் பார்க்கப்பட்டதாக பெறப்பட்ட தகவலும் அங்குள்ள ஜமாஅத்துல் உலமா சபையால் உறுதி செய்யப்படாத நிலையிலேயே நிராகரிக்கப்பட்டது.

(3) விமர்சனம்:

05.07.2016. செவ்வாய்க்கிழமை இரவில் மஹ்ழராவில் நடைபெற்ற கூட்டத்தின்போது, ஆலிம்களுக்கிடையே ஒத்த கருத்துக்கள் இன்றி, கருத்து மோதல் அதிகமாக இருந்தது.

விளக்கம்:

(அ) கூட்டத்தின் துவக்கம் முதல், பல பகுதிகளுக்கும் ஒவ்வொரு ஆலிமும் தத்தம் அறிமுகத்தின் அடிப்படையில் தகவல்களைச் சேகரித்து வந்தனர். 20.30 மணியான பின்பும் அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில், விரைவாக அறிவிப்பை வெளியிட சில பொதுமக்கள் அழுத்தம் கொடுத்ததை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

(ஆ) “தலைப்பிறை காணப்பட்ட தகவல்கள் பெறப்படாததால், சுமார் 19.30 மணியளவில் வெளியான - தமிழக அரசின் தலைமை காழீ உடைய அறிவிப்பு அடிப்படையில் முடிவை அறிவிக்கலாமே?” என்று முன்வைக்கப்பட்ட கருத்து பொறுமையுடன் நிலுவையில் வைக்கப்பட்டு, “பிறை பார்க்கப்பட்ட உறுதியான தகவல்கள் எப்படியேனும் கிடைத்திடாதா...? அதன்படி அறிவிப்பை வெளியிட்டு விடலாமே...??” என்ற ஏக்கம் கடைசி வரை இருந்தது. அதன் காரணமாகவே, கூட்டம் 20.45 மணி வரை நீடித்தது.

(4) விமர்சனம்:

காயல்பட்டினம் ஹாஜியப்பா தைக்கா பள்ளிக்கு வழமையாகத் தொழ வரும் ஒருவர் (பின்னர் இருவர் என்று கூறப்பட்டது) பிறை பார்த்த தகவலை கூட்டத்தில் தெரிவித்த பின்பும் அது கண்டுகொள்ளப்படவில்லை.

விளக்கம்:

கூட்டம் துவங்கியது முதல் நிறைவடைந்து அனைவரும் வெளியே கலைந்து செல்லும் வரை அடியேன் அங்குதான் இருந்தேன். வெளியிடங்களிலிருந்தெல்லாம் சில தகவல்கள் பெறப்பட்டு, அவற்றை உறுதி செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்றன.

இப்படியிருக்க, கூட்டம் முடிந்து கலைந்து செல்லும் வரை ஊரிலிருந்து யாரும் அங்கு வந்து பிறை பார்த்ததாக தகவல் தெரிவிக்கவுமில்லை; அவற்றை ஆலிம்கள் புறக்கணிக்கவுமில்லை. பொதுமக்களின் பலத்த எதிர்பார்ப்பு, அழுத்தங்களுக்கிடையே - உறுதி செய்யப்பட்ட தகவல்கள் கிடைக்காத நிலையில், மறுநாள் நோன்பு என்று அறிவித்து கூட்டம் கலைந்தது. அதற்குப் பிறகு யாரோ வந்ததாகவும், சொன்னதாகவும், அவர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் பரப்பப்படுகிறது.

அடியேனின் மனதில் எழும் சில கேள்விகள்:

(1) ஆர்வத்துடன் பிறை பார்க்கும் யாருக்கும், அதற்கான முடிவு அறிவிக்கப்படும் இடம் மஹ்ழரா அல்லது ஜாவியா என்று கண்டிப்பாகத் தெரியும். அப்படியிருக்க, மஃரிப் தொழுத சில நிமிடங்களிலேயே பிறையைப் பார்த்ததாகக் கூறப்படும் நிலையில், கூட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்ற பிறகு 21.00 மணியளவில் வந்து தெரிவித்தது ஏன்?

(2) பிறை பார்த்தவருக்கு எங்கு சென்று சொல்வது என்று தெரியவில்லை என்றே வைத்துக்கொண்டாலும், அதைக் கேட்டு உறுதி செய்தவர்களாவது குறித்த நேரத்தில் கூட்டத்தில் தெரிவித்திருக்கலாமே...?

இப்படியான அடியேனின் கேள்விகளையடுத்து, “ஏன்? பிறை பார்க்கப்பட்ட தகவல் தாமதமாகப் பெறப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக அனைவரின் அமல்களையும் பாழாக்கலாமா?” என்று கேட்கப்படலாம். (சிலர் கேட்டும் உள்ளனர்.)

இரவின் துவக்கத்திலேயே பார்க்கப்பட்ட பிறை குறித்து, ஊரே எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கூட்டம் முடிந்து அனைவரும் கலைந்து செல்லும் வரை சொல்லாமலிருந்தது, மார்க்க அறிஞர்களுக்கு சந்தேகத்தைத் தராதா? எந்த அடிப்படையில் - அறிவித்த தமது முடிவை மறு பரிசீலனை செய்வர்? அவர்கள் இடத்தில் இருந்துகொண்டு சிந்தித்தாலேயொழிய இதற்கு விடை கிடைக்காது.

தமிழக அரசின் தலைமைக் காழீ உடைய தகவல்கள் பெருநாள் அறிவிப்பாக இருந்தால், அது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு, எதனடிப்படையில் அவர் அறிவிப்பை வெளியிட்டாரோ அத்தகவலை தாமும் உறுதி செய்த பின்பே அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

அதே நேரத்தில், “நாளை பெருநாள் இல்லை” என்ற ரீதியில் யாரிடமிருந்து அறிவிப்பு பெறப்பட்டாலும், அது தொடர்பாக அவசரம் காண்பிக்காமல், பலத்த எதிர்ப்புகள் - மன உளைச்சல்களுக்கிடையிலும் அல்லாஹ்வுக்காக பொறுமையாக நேரம் எடுத்து, வேறு எங்கிருந்தேனும் பிறை பார்க்கப்பட்ட தகவல் கிடைக்கிறதா என்று பார்த்த பின்பே பக்குவமாக அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இவையனைத்தும், கடந்த சில ஆண்டுகளாக அடியேன் அவதானித்த அம்சங்கள். மனதில் பட்டதைத் தெரிவித்துவிட்டேன்.

யாரையும் தூக்கிப் பிடிக்கும் நிலையில் ஒரு செய்தியாளன் இருக்க மாட்டான் என்ற வரையறை அடியேனுக்கும் பொருந்தும்.

“பிறை பார்த்துதான் முடிவு எடுக்கப்பட வேண்டுமா?” என்பன போன்ற சர்ச்சைகளில் தலையிட இச்சிறியவனுக்கு எந்தத் தகுதியுமில்லை. ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டேன்... அங்கு அவதானித்தவற்றுக்கு முரணாக தகவல்கள் பரப்பப்பட்டதாலேயே இவற்றைக் கூற வேண்டியதாயிற்று!

அல்லாஹ்வுக்காக...
காயல்பட்டினத்திலிருந்து...
எஸ்.கே.ஸாலிஹ்
06.07.2016. புதன்கிழமை @ 19.55 மணி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...தன்னிலை விளக்கத்துக்கு நன்றி
posted by mackie noohuthambi (kayalpatnam ) [06 July 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44227

மருமகன் ஸாலிஹ் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தாலும் ஒரு பக்குவப்பட்ட தகவலாளராக பரிணாம வளர்ச்சி பெற்றிருப்பது பாராட்டுக்குரியது.

தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் என்று சொல்வார்கள்.

பிறை பார்த்த செய்திகளில் இவ்வளவு அழுத்தங்கள் மன வருத்தங்கள் இருந்த செய்திகள் எனக்கு கசிந்து வந்தாலும் அதை இலகுவாக புறந்தள்ளி விட்டேன். காரணம் இவ்வளவு உலமாக்கள் கூடி ஒரு கூட்டறிக்கையை அதுவும் ஒரு முக்கியமான அமல் விஷயத்தில் அவர்கள் அல்லாஹ்வை எவ்வளவு பயந்து இந்த முடிவை மேட்கொண்டிருப்பார்கள் என்பதையும் நான் உணர்ந்தேன்.

ஊரில் உள்ளவர்களில் பெரும்பான்மையோரின் நோன்புக்கும் பெருநாளுக்கும் இடையில் விளையாடுவது அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் போர் புரிவதற்கு சமமாகும் என்று நான் உணர்ந்தேன். நாளை மறுமையில் அல்லாஹ்விடம் இவர்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்ற நினைவு கூடவா இல்லாமல் இந்த தீர்ப்பை வழங்கி இருப்பார்கள் என்று நான் நினைத்து அவர்கள் தீர்ப்பை உளமார ஏற்றுக் கொண்டோம். அதுவும் 29 நோன்புதான் பிடித்திருக்கிறோம். 30 நாளை நிறைவு செய்வதிலும் ஒரு மன நிறைவு. அல்ஹம்து லில்லாஹ். அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்.

தவறு யார் பக்கம் என்பதை அவனே தீர்மானிப்பான். அப்படி ஒரு தீர்ப்பு வரும்போது கூட அவர்கள் கூட்டறிக்கைக்கு ஆதரவாக பேசியவர்களையும் அதற்கு எதிர்க் கணை தொடுத்து அவர்களை விமர்சிப்பவர்களையும் அல்லாஹ் மன்னிக்க போதுமானவன்.

மருமகன் ஸாலிஹ் அவர்கள் தன்னிலை விளக்கம் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. யாரும் எப்படியும் போங்கள் என்று இல்லாமால் இந்த உலமாக்கள் பொறுப்பெடுத்து இந்த நோன்பை பெருநாளை செம்மைப் படுத்தி தந்ததற்கு அல்லாஹ் அவர்களுக்கு நல்ல கூலியை கொடுப்பானாக. ஆமீன்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா....

எல்லோருக்கும் இதயம் நிறைந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved