காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தால், ஆண்டுதோறும் ரமழான் மாதம் முழுக்க 22.00 மணி முதல் 23.00 மணி வரை திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்புகள் மஸ்ஜித் வளாகத்தில் நடத்தப்படுவது வழமை.
நிகழாண்டில் (ஹிஜ்ரீ 1437), ஜூலை 04 திங்கட்கிழமையன்று, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜுமஆ மஸ்ஜித் கத்தீப், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியின் நிறைவில், நிகழாண்டில் - அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் ரமழான் இரவுத் தொழுகையை வழிநடத்திய மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தால் ஊக்கத்தொகை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டில், ரமழான் மாதம் முழுவதும் விளக்கவுரை வகுப்புகளை நடத்தவுள்ள மார்க்க அறிஞர்களின் விபரம் வருமாறு:-
தகவல்:
K.S.முஹம்மத் யூனுஸ்
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|