காயல்பட்டினம் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பில், நேற்று (ஜூலை 03 ஞாயிற்றுக்கிழமை) 18.30 மணியளவில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, காயல்பட்டினம் ஈக்கியப்பா தைக்கா மைதானத்தில், இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) தலைவர் எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டீ.எம்.) தலைமையில் நடைபெற்றது.
நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். ஹாமிதிய்யா மாணவர் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். காக்கும் கரங்கள் அமைப்பின் நலத்திட்டப் பணிகள் குறித்து மவ்லவீ ஹாஃபிழ் எச்.பி.என்.ஷாஹ்ஜாத் அல்புகாரீ உரையாற்றினார். காக்கும் கரங்கள் அமைப்பின் துணைத்தலைவர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் நன்றி கூற, ‘முத்துச்சுடர்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ துஆவுடன் மேடை நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
மஃரிப் வேளை வந்ததும், நோன்பு துறப்பு நிகழ்ச்சி துவங்கியது. அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர், திராட்சைப் பழம், மாதுளம்பழம், கடற்பாசி, குளிர்பானம், கறிகஞ்சி, கட்லெட், வடை வகைகள், பர்கர் ஆகிய பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
ஏற்பாடுகளை, காக்கும் கரங்கள் நற்பணி மன்ற நிறுவனர் எஸ்.எம்.பி.செய்யித் அஹ்மத் அஸ்ஹர், தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், துணைத்தலைவர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் ஆகியோர் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
ஹிஜ்ரீ 1436 ரமழான் மாதத்தில், காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சி தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|