காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் சார்பில், நோன்புப் பெருநாளை முன்னிட்டு, ஏழை முஸ்லிம் பெண்களுக்கு உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து, DCW ஆலையின் மக்கள் தொடர்புத் துறை துணை மேலாளர் சித்திரைவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டணத்தில் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் ஏழைப் பெண்களுக்கு உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சாகுபுரம், டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் ரம்ஜான் பெருநாள் உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி காயல்பட்டிணத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் பிலால் ஆசாத் தலைமை தாங்கினார். மதர் சமூக சேவை நிறுவனத்தின் இயக்குனர் கென்னடி முன்னிலை வகித்தார். டிசிடபிள்யூ நிறுவனத்தின் செயல் உதவித்தலைவர் (நிர்வாகம்) மே.சி.மேகநாதன் பெண்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு துறையின் துணை மேலாளர் சித்திரைவேல், மக்கள் தொடர்பு அதிகாரி பினோ மற்றும் மகளிர் சுயஉதவி குழு பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டி.சி.டபிள்யூ மக்கள் தொடர்பு அதிகாரி ஆறுமுகம் செய்து இருந்தார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DCW ஆலையின் நலத்திட்ட உதவிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|