காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) சார்பில், ஏழை மக்களுக்கான ஃபித்ரா உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் இன்று 16.30 மணி முதல் வினியோகிக்கப்பட்டது.
நகர் முழுக்க பகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து, அவர்களிடமிருந்து பெறப்பட்ட பட்டியல் படி, 1500 குடும்பத்தினர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் வீடுகளுக்கு ஆட்டோ வாகனங்களில் பொறுப்பாளர்கள் நேரடியாகச் சென்று உணவுப் பொதிகளை வினியோகித்துள்ளனர்.
அரிசி, சீனி, ஜவ்வரிசி, சேமியா, மைதா மாவு, தேங்காய், எண்ணெய், டால்டா உட்பட 10 வகையான அடங்கிய - ரூபாய் 175 மதிப்பிலான சமையற்பொருட்கள், அத்துடன் இறைச்சி வாங்குவதற்கான பணம் ஆகியன உணவுப் பொதியில் உள்ளடக்கம்.
பொதுமக்களிடமிருந்து ஃபித்ரா ஸதக்கா - தர்மப் பணமாக நபர் ஒருவருக்கு ரூபாய் 150 வீதம் வசூலிக்கப்பட்ட தொகை, தனவந்தர்கள் வழங்கிய சிறப்பு அனுசரணை நிதி ஆகிய தொகைகளைக் கொண்டு இவ்வினியோகப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வினியோகிக்கப்பட்டுள்ளது.
வினியோக ஏற்பாடுகளை, ஐ.ஐ.எம். குழும நிறுவனங்கள் & அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ மேற்பார்வையில், கரூர் ட்ரேடர்ஸ் ஹஸன் தலைமையில், ஜெய்ப்பூர் முஹ்யித்தீன், எம்.ஐ.மஹ்மூத் சுலைமான், எஸ்.ஐ.புகாரீ, எம்.ஏ.அப்துல் பாஸித், முத்து ரஃபீக், எம்.ஏ.அப்துல் ஜப்பார் ஆகியோரது ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
தகவல்:
M.A.அப்துல் ஜப்பார் மூலமாக K.S.முஹம்மத் யூனுஸ்
ஐ.ஐ.எம். சார்பில் ஹிஜ்ரீ 1435இல் ஃபித்ரா உணவுப் பொருட்கள் வழங்கப்பட்ட தகவல்கள் அடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஐ.ஐ.எம். சார்பில் ஹிஜ்ரீ 1436இல் ஃபித்ரா உணவுப் பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்த தகவல்கள் அடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஐ.ஐ.எம். தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|