இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டணம் கிளை சார்பில், நிகழும் ரமழான் மாதத்தை முன்னிட்டு, நகரிலுள்ள ஏழை - எளிய மக்களுக்கு இலவச அரிசி வினியோகிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டணம் நகர கிளை சார்பில், ஆண்டுதோறும் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, நகரிலுள்ள ஏழை - எளிய மக்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில், நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு, இம்மாதம் 01ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டணம் சதுக்கைத் தெருவிலுள்ள - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டணம் நகர கிளை அலுவலக கட்டிடமான, தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸில் வளாகத்தில், ஏழை - எளிய மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காழி அலாவுத்தீன் துஆ இறைஞ்சினார். கட்சியின் நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மது ஹசன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். இலவச அரிசி வினியோகத்தை தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹசன் துவக்கி வைத்தார்.
அவரைத் தொடர்ந்து கட்சியின் தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவர் மன்னர் ஏ.பாதுல் அஷ்காப், துணைச் செயலாளர் பெத்தப்பா எம்.ஏ.சி.சுல்தான், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்ராஹிம், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபுசாலிஹ், இரண்டாவது வார்டு தலைவர் பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், செயலாளர் எம்.ஜெட்.சித்தீக், நான்காவது வார்டு தலைவர் எம்.எல்.சேக்னா லெப்பை. செயலாளர் கே.எம்.என்.உமர் அப்துல்காதர், பதினெட்டாவது வார்டுத் தலைவர் எஸ்.ஆர்.ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்டோர் ஏழை – எளிய மக்களுக்கு இலவச அரிசிப் பொதியை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் காயல்பட்டணத்தைச் சேர்ந்த 1200 ஏழை - எளிய மக்களுக்கு தலா ஒன்றரை கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, நகர நிர்வாகிகள் ஒருங்கிணைத்து செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ.யூ.முஸ்லிம் லீகின் - கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) ரமழான் இலவச அரிசி வினியோகம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|