திருச்சியில் நடைபெற்ற - பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி இறுதிப்போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
திருச்சி சாம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேனிலைப்பள்ளி ஏற்பாட்டில், தமிழ்நாடு மாநில அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. அவ்வரிசையில் நடத்தப்பட்ட - மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணியும் பங்கேற்றது.
முதல் சுற்றுப்போட்டியில், திருச்சி பாய்லர் ப்ளாண்ட் மேனிலைப்பள்ளியை எதிர்த்தாடிய எல்.கே.மேனிலைப்பள்ளி அணி, 4-1 என்ற கோல் கணக்கில் வென்று, அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
அரையிறுதிப் போட்டியில், திருச்சி ஆர்.எஸ்.கிருஷ்ணன் மேனிலைப்பள்ளி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.
நேற்று (22.10.2016. சனிக்கிழமை) 16.30 மணியளவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் - இப்போட்டியை நடத்திய திருச்சி சாம்பியன் ஆங்கிலோ இந்தியன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி அணியை, எதிர்த்தாடி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்று, சாம்பியன் கோப்பையைத் தக்கவைத்தது.
எல்.கே.மேனிலைப்பள்ளி அணிக்கு பயிற்சியாளராக, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஜமால் உடன் சென்றிருந்தார்.
திருச்சி சென்ற அணியினரை, அங்கு - பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களான டீ.ஏ.எஸ்.உவைஸ், எல்.கே.கனீ, எல்.கே.லெப்பைத்தம்பி ஆகியோரும், பள்ளியின் முன்னாள் மாணவர்களான யு.நவ்ஃபல், எம்.ஏ.காழி அலாவுத்தீன் (டீ.ஏ.எஸ்.), திருச்சி ஜமால் முஹம்மத் கலை & அறிவியல் கல்லூரியில் பயிலும் - எல்.கே.மேனிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்களும் இறுதிப் போட்டியைக் கண்டுகளித்து, எல்.கே.மேனிலைப்பள்ளி அணியை உற்சாகப்படுத்தினர்.
தகவல் & படங்கள்:
ஆசிரியர் ஜமால்
ஆசிரியர் மீராத்தம்பி
A.S.புகாரீ
M.சதக்
|