தேசிய தூய்மை விழிப்புணர்வு நாளை முன்னிட்டு, காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் கடற்கரையைத் தூய்மைப்படுத்தி, உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி 29.09.2017. அன்று நடைபெற்றது.
கடற்கரை மணற்பரப்பில் தேங்கியிருந்த குப்பை கூளங்களை நகராட்சியின் துப்புரவுப் பணியாளர்களும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் தேசிய மாணவர் படை (என்.எஸ்.எஸ்.) மாணவியரும் இணைந்து அகற்றி சுத்தப்படுத்தினர்.
பின்னர், சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் உரையாற்றினார்.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஹமீத் ஹில்மீ – தூய்மை விழிப்புணர்வு உறுதிமொழி வாசகத்தை முன்மொழிய, களப்பணியாற்றிய அனைவரும் வழிமொழிந்தனர். நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லெட்சுமி உடனிருந்தார்.
|