பொதுமக்களை வாசிப்பின்பால் ஊக்கப்படுத்தும் நோக்குடன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகமும், பாபாப்ஸி (BAPAPSI) நிறுவனமும் இணைந்து, வரும் அக்டோபர் மாதம் 02 முதல் 11ஆம் நாள் வரை தூத்துக்குடியில் புத்தகத் திருவிழா நடத்தவுள்ளன. இதனையொட்டி, பட்டிமன்றங்கள், புகழ்பெற்ற பேச்சாளர்களின் சிறப்புரைகள், பள்ளி மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் என ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வடிவங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
இதுகுறித்த விபரங்களை உள்ளடக்கி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
பொதுமக்களை வாசிப்பின்பால் ஊக்கப்படுத்தும் நோக்குடன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகமும், பாபாப்ஸி (BAPAPSI) நிறுவனமும் இணைந்து, வரும் அக்டோபர் மாதம் 02 முதல் 11ஆம் நாள் வரை தூத்துக்குடியில் புத்தகத் திருவிழா நடத்தவுள்ளன. இதனையொட்டி, பட்டிமன்றங்கள், புகழ்பெற்ற பேச்சாளர்களின் சிறப்புரைகள், பள்ளி மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் என ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வடிவங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
இந்த புத்தகத் திருவிழாவின் சிறப்பம்சங்களில் சில ...
Ø 106 அரங்குகள்
Ø 70 க்கும் மேற்பட்ட தலை சிறந்த பதிப்பகங்கள்
Ø 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள்
Ø தமிழ், ஆங்கில புத்தகங்கள் மற்றும் மல்டி மீடியா (குறுந்தகடுகள்)
Ø கலை, இலக்கியம், சங்க இலக்கியம், சமூக நாவல்கள், சரித்திர நாவல்கள், மருத்துவம், சமையல், தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு வகையிலான புத்தகங்கள்
Ø அரசு வேலை வாய்ப்புக்கான தகுதித்தேர்வு புத்தகங்கள், IAS, IPS தேர்வுகள், NEET, TET, SLET உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கான புத்தகங்கள்
Ø சிறு குழந்தைகளுக்கான காமிக்ஸ் புத்தகங்கள், பல வண்ண சிறுகதைப் புத்தகங்கள்
Ø ரூ.10/- முதல் ரூ.1,000/- வரையிலான புத்தகங்கள் அனைத்தும் ஓரே கூரையின் கீழ்
Ø வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி
Ø காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
Ø இலவச நுழைவு அனுமதி
Ø இலவச பார்க்கிங் வசதி
Ø சுமார் 1,000 பேர் அமரக் கூடிய வகையில் கலையரங்கம்
Ø தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள் - சொற்பொழிவுகள்
மேற்படி வளாகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கலையரங்கத்தில் முதல் நாள் நிழ்ச்சியானது 02.10.2017 அன்று மாலை 4.00 மணிக்கு மங்கள இசையுடன் துவக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு என். வெங்கடேஷ் இ.ஆ.ப., புத்தகத் திருவிழாவினை துவக்கி வைத்து தலைமையுரை வழங்குவார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர். மு.வீரப்பன் வரவேற்புரை நிகழ்த்த உள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பெ.மகேந்திரன், இ.கா.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.ஆல்பி ஜாண் வர்கீஸ்,இ.ஆ.ப., தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு. தீபக் ஜேக்கப்,இ.ஆ.ப., தூத்துக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.செல்வ நாகரத்தினம் இ.கா.ப., ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். டீயுPயுளுஐ தலைவர் திரு. காந்தி கண்ணதாசன், மேனாள் தலைவர் திரு. எஸ்.எம்.மீனாட்சி சுந்தரம், துணைத் தலைவர் திரு. பெ.மயிலவேலன் மற்றும் தூத்துக்குடி உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. எஸ்.சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் திரு. வே.பிச்சை நன்றியுரை வழங்குகிறார்.
முதல் நாள் நிகழ்ச்சியில் சாகித்ய அகாடமி விருது பெற்ற திரு. சு.வெங்கடேசன் - மொழியும் வரலாறும் என்ற தலைப்பிலும், பட்டிமன்ற பேச்சாளர் பேராசிhpயர் ராமச்சந்திரன் - எப்போதும் சந்தோசம் என்ற தலைப்பிலும் சிறப்புரை வழங்க உள்ளார்கள்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் காலை 11.00 மணிக்கு அரசு பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சியும், மாலை 6.00 மணிக்கு அமுதசுரபி பத்திhpக்கை ஆசிhpயர் திரு. திருப்பூர் கிருஷ்ணன் - நான் ரசித்த சிறுகதைகள் என்ற தலைப்பிலும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பெ.மகேந்திரன் இ.கா.ப., - பாரதி கவிதைகளும் ஊக்க உளவியலும் என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்த உள்ளார்கள்.
தினசரி காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்சிகளும் தினசரி மாலை 6.00 மணி முதல் தலை சிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள் ஆகியனவும் நடைபெற உள்ளன. இதில் தலைசிறந்த பட்டிமன்ற பேச்சாளர்களும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களும் பங்கேற்க உள்ளனர். ஐஏஎஸ் தேர்வுக்கான ஒரு நாள் பயிலரங்கமும் நடத்தப்பட உள்ளது.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா குழு சார்பாக முதன்முறையாக நடைபெற உள்ள புத்தக திருவிழாவில் பொதுமக்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நிரல் வருமாறு:-
|