தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) காயல்பட்டினம் நகர கிளை சார்பில், சென்ட்ரல் மேனிலைப் பள்ளியில், 04.10.2017. புதன்கிழமையன்று நிலவேம்புக் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் தலைமை தாங்கி, வினியோகத்தைத் துவக்கி வைத்தார். முன்னிலை வகித்த சென்ட்ரல் மேனிலைப் பள்ளி தலைமையாசிரியர் எம்.கே.முஹம்மத் ஷெரீஃப், அதன் நிர்வாகிகள் மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கினர்.
இம்முகாமில், அப்பள்ளியின் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. தமுமுக – மமக மாவட்ட, நகர நிர்வாகிகள் முகாமுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
‘முர்ஷித் ஜெராக்ஸ்’ முஹ்ஸின்
|