காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து, காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட குருதிக்கொடை முகாமில், 27 பெண்கள் உட்பட 116 பேர் குருதிக்கொடையளித்துள்ளனர். முகாமுக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் ஒருங்கிணைப்பில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை – திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்துள்ள இரத்த வங்கிகள் சார்பில் குருதிக் கொடை முகாம், 03.10.2017. செவ்வாய்க்கிழமையன்று 10.00 மணி முதல் 16.00 மணி வரை நடத்தப்பட்டது.
நோனா அபூஹுரைரா கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய - மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (MEGA) தலைவர் எஸ்.ஏ.முஹ்யித்தீன் அனைவரையும் வரவேற்று தலைமையுரையாற்றினார்.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகளான எம்.என்.அஹ்மத் ஸாஹிப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த, எம்.எம்.முஜாஹித் அலீ அறிமுகவுரையாற்றினார். ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் சிவலிங்கம் வாழ்த்துரையாற்றினார்.
100 முறைக்கும் மேலாக குருதிக்கொடையளித்துள்ள காயலர் கானி முஹம்மத் முஹ்யித்தீன், 50 முறைக்கும் மேலாக குருதிக்கொடையளித்துள்ள காயலர் எஸ்.எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் இந்நிகழ்ச்சியில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டனர்.
துவக்க நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, 10.30 மணிக்கு முகாம் துவங்கி, 16.00 மணிக்கு நிறைவுற்றது. காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 27 பெண்கள், காயல்பட்டினம் & சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த 89 ஆண்கள் என – பல்வேறு இரத்த வகைகளைக் கொண்ட அனைத்து சமுதாய மக்கள் மொத்தம் 116 பேர் இம்முகாமில் குருதிக்கொடையளித்தனர்.
காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், கே.எம்.டீ. மருத்துமவனை நிர்வாகி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் முன்னாள் தலைவர் எஸ்.ஐ.தஸ்தகீர், முஹ்யித்தீன் பள்ளி முத்தவல்லி, புதுப்பள்ளி ஜமாஅத் பிரமுகர் எஸ்.ஐ.முஹம்மத் ஷாஃபிஈ, கத்தர் காயல் நல மன்றத் தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ், துபை காயல் நல மன்ற முன்னாள் துணைத்தலைவர் ‘துணி’ உமர், தம்மாம் காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஜியாவுத்தீன், அபூதபீ காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர்களான நோனா அபூஹுரைரா, ‘துணி’ அன்ஸாரீ, காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்களான டாக்டர் ராணி டப்ஸ், டாக்டர் ஹமீத் ஹில்மீ, காயல்பட்டினம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் ஃபாத்திமா பர்வீன், டாக்டர் செல்வின், காயல்பட்டினம் நகர மருத்துவர்களான டாக்டர் இத்ரீஸ், டாக்டர் ஜாஃபர் ஸாதிக், டாக்டர் ஃபாஸீ, டாக்டர் நர்கிஸ் பானு, தமுமுக – மமக நிர்வாகிகளான ஐதுரூஸ், முஹ்ஸின் முர்ஷித், ஜாஹிர் ஹுஸைன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இரத்த வங்கி முதன்மை அலுவலர்கள், திருச்செந்தூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கியின் முதன்மை அலுவலர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் – குருதிக்கொடையளித்த அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினர்.
முகாமில் பங்கேற்று – தமது விலை மதிக்கவியலாத குருதியை தன்னலம் பாராமல் தானமாக அளித்த குருதிக் கொடையாளர்கள், முகாம் நிகழ்விடத்திற்கு நேரில் வந்து அவர்களை உற்சாகப்படுத்திய நகரின் அனைத்து ஜமாஅத்தார், ஆண் – பெண் மருத்துவர்கள், ஒத்துழைப்பளித்த அனைத்து பொதுநல அமைப்புகள், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்செந்தூர் அரசு மருத்துவமனை நிர்வாகங்கள் உள்ளிட்ட அனைவருக்கும், முகாம் ஏற்பாடுகளுக்கு அனுசரணையளித்த நல்லுள்ளங்களுக்கும் – இம்முகாமை ஒருங்கிணைத்த “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறது.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கடந்த ஏப்ரல் மாதத்தில் காயல்பட்டினம் கே.எம்.டீ. மருத்துவமனை வளாகத்தில் நடத்தப்பட்ட குருதிக் கொடை முகாமில் 10 பெண்கள் உட்பட 88 பேர் குருதிக் கொடையளித்திருந்தனர். இம்முறை – முந்தைய எண்ணிக்கையை விட 32 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் குருதிக் கொடையளித்துள்ளனர்.
நடப்பு குருதிக் கொடை முகாமில், 24 சதவிகித பெண்கள் குருதிக் கொடையளித்துள்ளனர். முந்தைய முகாமில் குருதிக் கொடையளித்த பெண்களைக் காட்டிலும் இது 170 சதவிகிதம் அதிகமாகும். இந்திய அளவில் 6 சதவிகித அளவிலேயே பெண்கள் குருதிக் கொடையளிப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. தேசிய சராசரியை விட அதிகளவில் இம்முகாமில் பெண்கள் குருதிக் கொடையளித்திருப்பது பாராட்டத்தக்கது. இதற்காக முழு முயற்சி செய்த “நடப்பது என்ன?” குழுமத்தின் பெண்கள் பிரிவு நிர்வாகிகளை மனதாரப் பாராட்டுகிறோம்.
மேலும் - இம்முகாம் சிறப்புற நடந்தேற ஒத்துழைப்புகள் தந்த அனுசரணையாளர்களுக்கும், அனைத்து தன்னார்வலர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் - நன்றியினை உரிதாக்கிக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
E.அஹ்மத் ஸுலைமான் & “நடப்பது என்ன?” குழுமத்தினர். |