வீரபாண்டியன்பட்டினத்தில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) அணி இறுதிப் போட்டியில் வென்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இது இவ்வாண்டில் அவ்வணி பெற்றுள்ள 6ஆவது கோப்பையாகும். இதுகுறித்த செய்தியறிக்கை:-
KSC கால்பந்து அணி இவ்வருடத்தின் 6வது கோப்பையை கைப்பற்றியது!
பட்டனம் இளைஞர் மன்றம் சார்பாக 3வது டான் பாஸ்கோ கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் கடந்த செப்டம்பர் 24ம் தேதி துவங்கி அக்டோபர் 1ம் தேதி வரை வீரபாண்டியபட்டனம் கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் தூத்துக்குடி ஸ்பிரிட்டட் யூத் மற்றும் ப்ரண்ட்ஸ் அணிகள், நெல்லை யூத், நாசரேத் மர்காசியஸ், புன்னக்காயல் புனித ஜோசப், பட்டனம் இளைஞர் மன்றம் ஆகிய அணிகளுடன் காயல்பட்டினம் USC மற்றும் KSC அணிகள் பங்கேற்றனர்.
KSC அணி கால் இறுதி ஆட்டத்தில் புன்னக்காயல் புனித ஜோசப் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கிலும், அரை இறுதி ஆட்டத்தில் பட்டனம் இளைஞர் மன்றம் அணியை 2 - 0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
USC அணியினர் கால் இறுதி ஆட்டத்தில் 1 - 0 என்ற கோல் கணக்கில் நாசரேத் மர்காசியஸ் அணியையும், அரை இறுதி போட்டியில் தூத்துக்குடி ப்ரண்ட்ஸ் அணியை 4 - 1 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
KSC மற்றும் USC அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி அக்டோபர் 1ம் தேதி ஞாயிற்று கிழமை மாலை நடைபெற்றது.
பரப்பரப்பாக துவங்கிய இறுதி ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. பிற்பாதி ஆட்டத்தில் KSC அணியினர் முழு திறனை வெளிபடுத்தி 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று டான் பாஸ்கோ கோப்பையை கைபற்றினர். KSC அணிக்காக இஸ்மாயில் மற்றும் லத்தீஃப் ஆகிய வீரர்கள் கோல் அடித்தனர்.
முன்னதாக சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட பங்கு தந்தை Rev பிரத்திஃப் A . காட்டர், பேராசிரியர் லெட்டிஸ் ரோட்ரிக்கோ, முன்னால் இந்திய கால்பந்து வீரர் அர்லாண்டோ ராயன் ஆகியோருக்கு இரு அணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற, வெற்றிக்கு முனைந்த அணிகளுக்கு கோப்பையும், பரிசும் அளித்து வாழ்த்தி சங்கைபடுத்தினர்.
இப்போட்டியை கான திரளான காயலர் உட்பட சுற்று வட்டாரத்திலிருந்து கால்பந்து ரசிகர்கள் வருகை தந்து ஆட்டத்தை கண்டு ரசித்தனர்.
இப்போட்டியின் நேரடி தகவல்கள் பல்வேறு WhatsApp குழுமங்களில் பகிரப்பட்டதால் உலகில் பல பகுதியில் வாழும் காயல் கால்பந்து ரசிகர்கள் உற்சாகமாக போட்டியின் முடிவுகளை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர்.
இவ்வெற்றியின் மூலம் 2017ம் ஆண்டு KSC அணி கைபற்றும் 6வது கோப்பையாகும்.
2017ம் ஆண்டு KSC அணி பெற்ற வெற்றிகள் பின்வருமாறு:
1) TDFA லீக் ஆட்டங்களில் முதலிடம்
2) TDFA சூப்பர் லீக் போட்டியில் வெற்றி பெற்று மாவட்ட கால்பந்து சாம்பியன்
3) பொள்ளாச்சி மாநில கால்பந்து போட்டியில் முதிலிடம்
4 ) புன்னக்காயல் மாவட்ட கால்பந்து போட்டியில் முதலிடம்
5) அதிரை எழுவர் மாநில கால்பந்து போட்டியில் முதலிடம்
6) வீரபாண்டியபட்டனம் டான் பாஸ்கோ கோப்பைக்கான கால்பந்து போட்டியில் முதலிடம்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
K.K.S.ஸாலிஹ்
(சீஷெல்ஸிலிருந்து...)
|