தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) காயல்பட்டினம் நகர கிளை சார்பில், எல்.கே. துவக்கப் பள்ளி, சென்ட்ரல் துவக்கப் பள்ளியில், 05.10.2017. வியாழக்கிழமையன்று நிலவேம்புக் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.
எல்.கே. துவக்கப் பள்ளியில் சுமார் 160 மாணவ-மாணவியர், சென்ட்ரல் துவக்கப் பள்ளியில் சுமார் 150 மாணவ-மாணவியருக்கு நிலவேம்புக் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சியின் துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லட்சுமி உடனிருந்தார். ஏற்பாடுகளை, தமுமுக – மமக மாவட்ட, நகர நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
M.J.இர்ஷாத்
(நெய்னார் தெரு, காயல்பட்டினம்.)
|