சமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இளம் மாணவியருக்கு விளக்கும் நோக்குடன் திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையம் சார்பில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் ஒருங்கிணைப்பில், காயல்பட்டினத்தின் அனைத்து மகளிர் மேனிலைப் பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேரஷன் மேனிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நிகழ்ச்சி, அரசு மகளிர் மேனிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 900 மாணவியர் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
சமூக ஊடகங்கள் (SOCIAL MEDIA) ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (Superintendent of Police; SP) உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, திருச்செந்தூர் மகளிர் காவல்நிலையம் - அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், பள்ளிக்கூட மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி - இறைவன் நாடினால், காயல்பட்டினத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் நடத்தப்படவுள்ளது. நடப்பது என்ன? குழுமம் பெண்கள் பிரிவு இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறது.
இத்தொடரின் முதல் நிகழ்ச்சி - செப்டம்பர் 9, 2017 அன்று காயல்பட்டினம் சுபைதா மேனிலைப்பள்ளியில் நடந்தது. இரண்டாவது நிகழ்ச்சி, செப்டம்பர் 16, 2017 அன்று சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியில் நடந்தது. மூன்றாவது நிகழ்ச்சி, முஹைதீன் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி வளாகத்தில் செப்டம்பர் 23, 2017 அன்று நடந்தது.
இத்தொடரின் நான்காவது நிகழ்ச்சி அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் இன்று (அக்டோபர் 6, 2017) நடைபெற்றது. அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் 6 வது வகுப்பு முதல் 12 வது வகுப்பு சார்ந்த ஏறத்தாழ 900 மாணவியர் கலந்துக்கொண்டனர்.
முன்னாள் காயல்பட்டினம் நகர்மன்றத்தலைவி திருமதி I.ஆபிதா சேக் B.Sc., B.Ed. - முன்னிலை வகித்து, நிகழ்ச்சியினை நெறிப்படுத்தினார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது.
தொடர்ந்து, திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் துணை ஆய்வாளர் திருமதி M.ரவிமதி M.A. (English Literature) - பாலியல் குற்றங்கள் பற்றி உரை நிகழ்த்தினார்.
அடுத்து, அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் தலைமை காவலர் திருமதி சந்திரிகா - மாணவியர் மத்தியில் உரையாற்றினார்.
அவரை தொடர்ந்து, அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் ஆய்வாளர்_ மாணவியர் மத்தியில் *திருமதி C.சாந்தி உரையாற்றினார்.
தொடர்ந்து, அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை செ.ஹெப்சிபா லைட் M.Sc.,M.Ed.,M.Phil - மாணவியருக்கு அறிவுரை வழங்கி, நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டோருக்கு நன்றியும் தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை - முன்னாள் நகர்மன்றத்தலைவர் I.ஆபிதா சேக் தலைமையில், நடப்பது என்ன? குழுமத்தின் பெண்கள் பிரிவு நிர்வாகிகள் - திருமதி மொபா மாலிக், திருமதி நிலோபர் சாமு, திருமதி தஸ்லீமா அஜீஸ் ஆகியோர் செய்திருந்தனர். தேசிய கீதம் இசைக்கப்பட, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: அக்டோபர் 6, 2017; 8:30 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|