காயல்பட்டினம் தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப் பள்ளியில் வெற்றுப் பணியிடங்களை நிரப்பக் கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் தமிழக அரசுக்குக் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் தீவு தெருவில் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி இயங்கிவருகிறது. நகரின் அதிகளிவிலான மாணவியர் பயிலும் பள்ளிக்கூடமான இதில், சில காலியிடங்கள் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் உள்ளன. அவை:-
(1) வேதியியல் பாடத்திற்கான முதுகலை ஆசிரியர் (PG ASSISTANT) - ஒரு இடம்
(2) அலுவலக உதவியாளர் (OFFICE ASSISTANT) - ஒரு இடம்
(3) துப்புரவு பணியாளர் (SWEEPER) - ஒரு இடம்
(4) காவலாளி (WATCHMAN) - ஒரு இடம்
இப்பணியிடங்களை உடனடியாக தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பிட கோரி - கல்வித்துறையின் முதன்மை செயலர் திரு பிரதீப் யாதவ் IAS அவர்களிடமும், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு வாயிலாக பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர் அவர்களுக்கும் - நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: அக்டோபர் 4, 2017 ; 11:30 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|