தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஐவர் பீச் கால்பந்து போட்டியில் KSC அணியினர் முதலிடம் பெற்றுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்ட இளைஞர் நல்வாழ்வு இயக்குனரகம் இணைந்து, ஐவர் பீச் கால்பந்து போட்டிகள் கடந்த அக்டோபர் 26ஆம் நாளன்று தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை விளையாட்டு மைதானத்தில் நடத்தின.
இதில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) அணி உட்பட - மாவட்டம் முழுவதிலிருந்தும் மொத்தம் 30 அணிகள் பங்கேற்றனர். KSC அணியினர் முதல் சுற்றுப் போட்டியில் மூக்குப்பீறி புனித மார்க்ஸ் பள்ளி அணியை 3 - 2 என்ற கோல் கணக்கிலும், இரண்டாம் சுற்றுப் போட்டியில் தூத்துக்குடி ஸ்பிரிட்டட் யூத் அணியை 4 -0 என்ற கோல் கணக்கிலும், காலிறுதிப் போட்டியில் தூத்துக்குடி ப்பிரண்ட்ஸ் அணியை 2 - 0 என்ற கோல் கணக்கிலும், அரையிறுதிப் பேட்டியில் நாசரேத் மர்காசியஸ் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இறுதிப் போட்டியில் KSC அணியும், தூத்துக்குடி SDAT அணியும் மோதின. இதில் KSC அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. அவ்வணியின் மீராஸாஹிப் அந்த இரண்டு கோல்களையும் அடித்தார். வெற்றிபெற்ற வீரர்கள் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கிப் பாராட்டப்பட்டனர்.
இப்போட்டில் முதலிடம் பெற்றதன் மூலம் KSC அணியினர் மாநில அளவில் நடைபெரும் ஐவர் பீச் கால்பந்து போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
K.K.S.முஹம்மத் ஸாலிஹ் |