காயல்பட்டினம் சிவன்கோவில் தெரு மயான நிலத்திற்கு வேலியமைக்க, நகராட்சியின் சார்பில் 3 லட்சம் ரூபாய் செலவு மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சிக்கு பாத்தியப்பட்ட - சிவன்கோவில் தெரு மயான நிலத்திற்கு (சர்வே எண் 392/5) - 3 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பாதுகாப்பு வேலி அமைக்க - ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் நவம்பர் 1 வரை வழங்கப்படும் என்றும், நவம்பர் 2 அன்று ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி மூலம் வெளியிடப்பட்ட அறிவிப்பும், பணியின் விபரங்களும் வருமாறு:-
பணி விபரங்களின் இறுதியில் - சம்பந்தம் இல்லாமல், பப்பரப்பள்ளி நிலத்தை சமன்செய்ய 46 மணி நேர JCB பணி - என கூறப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 24, 2017; 6:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|