வடகிழக்குப் பருவ மழையை எதிர்பார்த்து, காயல்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தெருவிலுள்ள சாக்கடைக் கழிவு நீர் கால்வாயில், நகராட்சியின் சார்பில், அதன் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் மேற்பார்வையில் நேற்று துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.
அதுபோல, குப்பைகள் அதிகம் தேங்கியிருந்த முதன்மைச் சாலை, புறவழிச் சாலை, அலியார் தெரு, ஸீ-கஸ்டம்ஸ் சாலை ஆகிய பகுதிகளிலும் குப்பைகள் அகற்றப்பட்டு, துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.
|