புனித மரியன்னை கல்லூரி மாணவியருடன் இணைந்து, காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், 01ஆவது வார்டு கடையக்குடி (கொம்புத்துறை) அரசு நடுநிலைப் பள்ளி மாணவ-மாணவியருக்கு டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, 21.10.2017. சனிக்கிழமையன்று நடத்தப்பட்டது.
டெங்கு நோய் அறிகுறிகள், அதை ஒழிக்கும் முறைகள், நிலவேம்புக் குடிநீரின் மகத்துவம் குறித்து காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் பேசினார்.
தொடர்ந்து, பள்ளி வளாகத்தில், டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் உருவாகாமலிருப்பதற்குத் தேவையான களப்பணிகள் செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கடையக்குடி அரசு நடுநிலைப் பள்ளியின் மாணவ-மாணவியர், பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
பின்னர், அப்பள்ளி வளாகத்தில் நிழல் தரும் மரங்கள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நகராட்சி சுகாதார ஆய்வாளருடன் இணைந்து, புனித மரியன்னை கல்லூரி மாணவியரும் மரங்களை நட்டு நீரூற்றினர்.
|