சஊதி அரபிய்யாவில் கிழக்கு மாகாணத்தில் வேலை தேடி வரும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்குத் தகுந்த வேலைவாய்ப்புகள் கிடைத்திட வழிகாட்டுவதற்காக, வேலைவாய்ப்பு வழிகாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக, தம்மாம் காயல் நல மன்ற பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்ட நிகழ்வறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால். அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
சவுதி அரேபியா, தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 81 வது பொதுக்குழு கூட்டம், இறைவனின் அருளால் 13.10.17 வெள்ளிக்கிழமை மாலை 6:00மணியளவில், தம்மாம் ரோஸ் உணவகம் வளாகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்து லில்லாஹ்.
இந்த கூட்டத்தை சகோதரர் பஷீர் அஹ்மது அவர்களின் மகன், இளவல் ரிஷாத் அன்வர் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார். வந்திருந்த அனைவர்களையும் மன்றத்தின் துணைத்தலைவர்களில் ஒருவரான ஜனாப்.நூர்தீன் அவர்கள் வரவேற்று வரவேற்பு உரை நிகழ்த்தினார்கள்.
தலைமையுரை:
அடுத்ததாக, மன்றதின் தலைவர் ரபீக் அஹ்மது அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள். அவரது உரைச்சுருக்கம்:-
சென்ற பொதுக்குழுவிற்கும், நடைபெறும் பொதுக்குழுவிற்கும் இடைப்பட்ட காலத்தில், நம் மன்றத்தால் இக்ராஃ & ஷிஃபா அமைப்பின் மூலமாக செய்யப்பட்ட உதவிகளை குறிப்பிட்டார்.
இக்ராஃ கல்விச் சங்கம் அறிமுகப்படுத்தியுள்ள கல்வி கடன் உதவித்தொகை குறித்தும் , ஷிஃபா அமைப்பிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் மற்றும் அரங்காவலர்கள் ஆகியோருக்கு தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
செயளாலர் உரை :
அடுத்து , மன்றத்தின் செயலாளர் இஸ்மாயில் அவர்களது உரையில் மன்றத்தின் செயல்பாடுகள் , எதிர்கால திட்டங்கள் குறித்தும் மார்க்க அறிவுரைகளோடு பட்டியலிட்டார்கள்.
ஜுலை மாதம் 29ஆம் நாளன்று மன்றத்தின் சார்பாக குடும்பவியல் & குழந்தை வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம், “வாழ்வியல் வசந்தம்” எனும் தலைப்பில் முனைவர் எம்.ஹுஸைன் பாஷா அவர்கள் மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சி குறித்தும். ஆண் – பெண் உடலியல், உளவியல் தன்மைகளை அறிந்து செயல்படல், மகிழ்ச்சியான திருமண வாழ்வு, கணவன் – மனைவி உறவைப் பலப்படுத்தும் வழிகாட்டல்கள், பெற்றோர் – குழந்தைகளுக்கிடையிலான பிரச்சினைகளுக்குத் தீர்வு, குழந்தைகளின் மனோநிலையை சரியான வழியில் கொண்டு செல்லல், பதின்பருவ மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு, இஸ்லாமிய சூழலில் தரமான குழந்தைகளை உருவாக்கல் உள்ளிட்ட அம்சங்களை கொண்ட நிகச்சிகளை மன்றம் மூலம் அடிக்கடி நடத்த வேண்டும் தனதுரையில் குறிப்பிட்டார்.
மேலும் மன்ற உறுப்பினர்கள் மூலம் மாதம் தோறும் வழங்கி வரும் பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி திட்டம் குறித்தும் விளக்கினார்கள்.
வேலை வாய்ப்பு கமிட்டி :
சவூதி அரேபியாவில் நிலவி வரும் அசாதரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு கிழக்கு மாகாணத்தில் புதியதாக வேலை தேடி வருவோருக்கும் , வேலையின்றி இருப்போருக்கும் உதவ 7 பேர் கொண்ட கமிட்டு அமைக்கப்பட்டுள்ளது .
அக்கமிட்டியின் நோக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து சகோதர் P.M.T.அபூபக்கர் மற்றும் சகோதர். இம்தியாஸ் அவர்கள் விளக்கினார்கள். மேலும் இத்திட்டம் குறித்து உறுப்பினர்களிடம் கலந்தாலோசிக்கபட்டு ஆலோசனைகள் பெறப்பட்டது
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
இவர்களின் உரையைத் தொடர்ந்து, தம்மாம் பகுதிக்குப் புதிதாய் வந்துள்ள சகோதரர்.தல் அஹ்மது சுலைமான் அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு மன்றத்தில் இணைத்துக் கொண்டார்கள்.
நிதிநிலை அறிக்கை:
அடுத்து மன்றத்தின் பொருளாலர். இப்ராஹிம் அவர்கள் நிதிநிலை அறிக்கையை புள்ளி விவரங்களோடு சமர்பித்தார்கள்.
கலந்துரையாடல் & நன்றியுரை:
அடுத்ததாக, உறுப்பினர்களிடையே மன்ற செயல்பாடுகள் குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடி ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் பெறப்பட்டது.
அடுத்து, மன்றத்தின் துணைச்செயளாலர் பஷீர் அஹ்மது அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள் , நன்றியுரையில் இப்பொழுக்குழு சிறப்புற நடைபெற உறுதுணை புரிந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பிணர் அனைவருக்கும் , இக்கூட்டத்திற்கு அணுசரனை வழங்கிய புதியதாக திருமணமான மன்ற உறுப்பினர்கள் ஹாபிசா.இஸ்மாயில் (48) , நவ்பல் , ஷப்வான் ஆகியோருக்கும் நன்றியும் அவர்களது மண வாழ்வு சிறக்கவும் துஆ செய்யப்பட்டது.
இறுதியாக துஆ கஃப்பாராவுடன் , இரவு உணவுடன் 81 வது பொதுக்குழு கூட்டம் இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
B.முத்துவாப்பா புகாரீ
படங்கள்:
R.கலீலுர் ரஹ்மான்
(செயற்குழு உறுப்பினர்கள், தம்மாம் கா.ந.மன்றம்)
[சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 09:35 / 21.10.2017.]
|