காயல்பட்டினத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், 18.10.2017. அன்று 15.15 மணி முதல் 15.30 மணி வரை திடீரென கருமேகம் திரண்டு இதமழை பொழிந்தது.
இதன் காரணமாக, நகரின் தாழ்வான சாலைப் பகுதிகளில் “வழமை போல” மழை நீர் தேங்கிக் காணப்பட்டது.
இம்மழைக்குப் பின்பு வெளியிடங்களிலிருந்து ஊர் வந்தோரிடம், “18ஆம் நாளன்று நம்ம ஊருல சூப்பர் மழை பெஞ்சிதுப்பா!” என்று சொன்னால், “யாரு காதுல பூ சுத்துறே?” என்று அவர்கள் கேட்குமளவில் – மழை பெய்த அடையாளத்தையே உணர முடியாத அளவுக்கு இன்று மீண்டும் வெயில் வாட்டி வதைக்கிறது.
1. Re:... posted byvilack sma (Jeddah)[20 October 2017] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45847
< “18ஆம் நாளன்று நம்ம ஊருல சூப்பர் மழை பெஞ்சிதுப்பா!” என்று சொன்னால், “யாரு காதுல பூ சுத்துறே?” என்று அவர்கள் கேட்குமளவில் – மழை பெய்த அடையாளத்தையே உணர முடியாத அளவுக்கு இன்று மீண்டும் வெயில் வாட்டி வதைக்கிறது. > C & P
வெயில் அடித்ததால் மழை பெய்ததை நம்பாதவர்கள் குண்டும் குழியுமான சாலைகளையும் , அதில் தேங்கி கிடக்கும் நீரையும் பார்த்ததும் , இது மழை நீர்தான் , சூப்பர் மழைதான் பெய்துள்ளது என்பதை நம்பித்தான் ஆகவேண்டும் . இவர்களுக்கு நம்பிக்கை வர காரணமாணவர்களுக்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும் . ஆம் , ஒவ்வொருமுறை புதிதாக சாலைகள் போடும்போதும் , பழுதான சாலைகளை பழுது பார்க்கும்போதும் எதையாவது நொண்டி சாக்குகளை சொல்லி வேலைகள் நடைபெறாமல் இருக்க தடை உத்தரவு வாங்கியவர்களுக்கு நன்றிகள் சொல்லித்தானே ஆகணும் .
இந்த ஊரில் இனிமேலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் எந்தவொரு வேலையும் உருப்படியாக நடக்காது . ஏனெனில் எதிராளி என்று ஒருவன் இருப்பான் , எதையாவது நோண்டிக்கொண்டே இருப்பான் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross