ஊழலுக்கெதிரான விழிப்புணர்வு வாரம் இம்மாதம் 30ஆம் நாளன்று துவங்குகிறது. இதனை முன்னிட்டு, இணையதளம் வாயிலாக ஊழலுக்கெதிரான உறுதிமொழியெடுக்க காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.. இதுகுறித்த செய்தியறிக்கை:-
ஒவ்வோர் ஆண்டும் - அக்டோபர்/நவம்பர் - மாதங்களில். ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வாரம் (VIGILANCE AWARENESS WEEK), நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு - அக்டோபர் 30 முதல் நவம்பர் 4 வரை, விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படும்.
இதனை முன்னிட்டு - பல்வேறு நிகழ்ச்சிகளை, இறைவன் நாடினால் - நடப்பது என்ன? குழுமம், நடத்திட திட்டமிட்டுள்ளது. அது குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
இறைவன் நாடினால், காயல்பட்டினம் நகர மக்கள், அரசு துறைகளில் அன்றாடம் ஊழல்/லஞ்சம் ஆகியவற்றால் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக, நடப்பது என்ன? குழுமம் எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக - திட்டமிடப்பட்டுள்ள இந்நிகழ்வுகள் இருக்கும்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், ஊழலுக்கு எதிராக உறுதிமொழி எடுக்க - இணையதள பக்கம் ஒன்றினை, மத்திய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (CENTRAL VIGILANCE COMMISSION; CVC) துவக்கியுள்ளது.
அதன் முகவரி:
https://pledge.cvc.nic.in
இந்த இணையதளம் பக்கம் வாயிலாக உறுதி மொழி எடுப்பவர்களை ஊக்குவிக்கும் விதிமாக, சான்றிதழ் ஒன்று மென் நகலாக (Soft Copy), ஈமெயில் முகவரிக்கு அனுப்பப்படும்.
இவ்வாறு உறுதிமொழி எடுத்து, ஈமெயில் மூலம் சான்றிதழ் பெற்றவர்கள் - அந்த சான்றிதழை, நடப்பது என்ன? குழுமத்தின் ஈமெயில் முகவரிக்கு (nadappathuenna@gmail.com | mega@kayal.org) அனுப்பினால், அவ்வாறு உறுதிமொழி எடுத்தவரை ஊக்குவிக்கும் விதமாக, இலவசாக அந்த சான்றிதழ் - நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம் மூலம் - அச்சிட்டு வழங்கப்படும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன, சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 23, 2017; 10:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|