NEET எனப்படும் – மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையத்தை காயல்பட்டினத்தில் துவக்கிட வலியுறுத்தி, தமிழக அரசின் கல்வித் துறை செயலர் ப்ரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ். இடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
மருத்துவ படிப்புகளுக்கான நுழைவு தேர்வு - The National Eligibility cum Entrance Test (NEET) ஆகும். மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்கும் மையங்களை துவக்க, அரசு முடிவு செய்து, தூத்துக்குடி மாவட்டத்தில் 16 மையங்கள் துவக்கப்படும் என்ற அறிவிப்பும் சில நாட்களுக்கு முன்பு - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளிவந்தது.
அந்த அறிவிப்பில் - தூத்துக்குடி மாவட்டத்தின் மூன்றாவது மிகப்பெரிய நகரம் காயல்பட்டினம் இடம்பெறாதது பெருத்த அதிர்ச்சியை - மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் - ஏற்படுத்தியது.
இது சம்பந்தமாக, இன்று காலை - தமிழக அரசின் கல்வித்துறை அரசு முதன்மை செயலர் திரு பிரதீப் யாதவ் IAS அவர்களை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து, நடப்பது என்ன? குழுமம் சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
அதில் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட தூத்துக்குடி மாவட்ட பட்டியலில், காயல்பட்டினம் விடுப்பட்டிருப்பது குறித்து - கடுமையான அதிருப்தி பதிவு செய்யப்பட்டது. அவ்வேளையில் - காயல்பட்டினம் நகரின் - கல்வித்துறை நிலை குறித்து, விபரங்களை - செயலர் கேட்டார்.
அவரிடம் - காயல்பட்டினம் நகரில், ஆண்டொன்றுக்கு 600 மாணவர்கள், பன்னிரண்டாம் வகுப்பு அரசு தேர்வு எழுதுகிறார்கள் என்றும், கல்வியில் சிறந்து விளங்கும் காயல்பட்டினம் நகரில் இருந்து - கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு மாணவர்கள், தகுதி அடிப்படையில் (MERIT) தேர்வு செய்யப்பட்டு, அரசு மருத்துவக்கல்லூரிகளில் பயின்றனர் என்ற விபரம் அவருக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும் - காயல்பட்டினத்தில் இந்த பயிற்சி மையம் அமைவதால், காயல்பட்டினம் மட்டும் அல்லாது, அருகாமையில் உள்ள ஊர் மாணவர்களும் பயனடைவர் என்ற தகவலும் - அவருக்கு தெரிவிக்கப்பட்டது.
விபரங்களை கேட்டறிந்த செயலர், இது குறித்து - உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 27, 2017; 4:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|