லஞ்ச ஊழல் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு, வரும் நவம்பர் 03ஆம் நாளன்று – மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியை - U.சகாயம் IAS உடைய “மக்கள் பாதை” அமைப்பும், காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமமும் இணைந்து நடத்தவுள்ளன. இதுகுறித்த செய்தியறிக்கை:-
லஞ்சம், ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வாரம் (VIGILANCE AWARENESS WEEK), நாடு முழுவதும், அக்டோபர் 30 முதல் நவம்பர் 4 வரை - இவ்வாண்டு கடைபிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டல் அமைப்பு (மெகா) உடைய சமூக ஊடகப்பிரிவு நடப்பது என்ன? மற்றும் திரு U.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின்படி இயங்கும் மக்கள் பாதை அமைப்பு ஆகியவை இணைந்து, மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் ஆகியோர் - லஞ்சம், ஊழலுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியினை நடத்தவுள்ளன.
நவம்பர் 3 வெள்ளியன்று மாலை 4:30 மணியளவில் துவங்கும் இந்நிகழ்வில் - மக்கள் பாதை அமைப்பின் களப்பணி ஒருங்கிணைப்பாளர் திரு உமர் முக்தார் கலந்துக்கொண்டு - உறுதிமொழியினை வாசிப்பார்.
இந்நிகழ்ச்சியில் - மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் திரளாக கலந்திட, நடப்பது என்ன? குழுமம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 29, 2017; 5:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|