லஞ்சம் ஊழலுக்கெதிரான விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் அறிவித்ததன் அடிப்படையில், இணையதளத்தின் வழியே உறுதிமொழி எடுத்த பொதுமக்களுக்கு, 03.11.2017. அன்று நடைபெறவுள்ள பொதுமக்கள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியின்போது சான்றிதழ்கள் நேரடியாக வழங்கப்படும் என அக்குழுமத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
லஞ்சம், ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வாரம் (VIGILANCE AWARENESS WEEK), நாடு முழுவதும், அக்டோபர் 30 முதல் நவம்பர் 4 வரை - இவ்வாண்டு கடைபிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டல் அமைப்பு (மெகா) உடைய சமூக ஊடகப்பிரிவு நடப்பது என்ன? மற்றும் திரு U.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின்படி இயங்கும் மக்கள் பாதை அமைப்பு ஆகியவை இணைந்து, மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் ஆகியோர் - லஞ்சம், ஊழலுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியினை நடத்தவுள்ளன.
நவம்பர் 3 வெள்ளியன்று மாலை 4:30 மணியளவில் துவங்கும் இந்நிகழ்வில் - மக்கள் பாதை அமைப்பின் களப்பணி ஒருங்கிணைப்பாளர் திரு உமர் முக்தார் கலந்துக்கொண்டு - உறுதிமொழியினை வாசிப்பார். இந்நிகழ்ச்சியில் - மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் திரளாக கலந்திட, நடப்பது என்ன? குழுமம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் - https://pledge.cvc.nic.in என்ற இணையதளம் மூலமாக - உறுதிமொழி எடுத்து, மென் சான்றிதழை - நடப்பது என்ன? குழுமத்திற்கு அனுப்பித்தந்தவர்களின் சான்றிதழ்கள் (அக்டோபர் 31 வரை) அச்சிடப்பட்டு தயாராக உள்ளது.
நவம்பர் 3 தேதிய நிகழ்ச்சியின் போது - இறைவன் நாடினால் - அச்சான்றிதழ்கள் வழங்கப்படும். சான்றிதழ்களை அச்சிட நடப்பது என்ன? குழுமத்திற்கு அனுப்பித்தந்தவர்கள், அந்த நிகழ்ச்சியில் தங்கள் அடையாள அட்டையுடன் கலந்துக்கொண்டு, சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 1, 2017; 2:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|