லஞ்ச – ஊழலுக்கெதிரான விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, பள்ளிக்கூட மாணவர் ஒன்றுகூடலின்போது லஞ்ச – ஊழலுக்கு எதிராக மாணவர்களை உறுதிமொழி எடுக்கச் செய்ய “நடப்பது என்ன?” குழுமம் சார்பில், நகரிலுள்ள அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் வேண்டுகோள் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
மத்திய ஊழல்தடுப்பு ஆணையம் (CENTRAL VIGILANCE COMMISSION; CVC) - ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் - நவம்பர் மாதங்களில், நாடு முழுவதும், ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வாரத்தை (VIGILANCE AWARENESS WEEK) கடைபிடிக்கிறது.
இவ்வாண்டு இந்த வாரம் - அக்டோபர் 30 முதல் நவம்பர் 4 வரை கடைபிடிக்கப்படுகிறது. மேலும் இவ்வாண்டு நிகழ்வுகளின் மைய கருத்தாக - "எனது லட்சியம் - லஞ்ச, ஊழல் இல்லாத இந்தியா" "My Vision - Corruption Free India" என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான விழிப்புணர்வை நாட்டின் அனைத்து மக்களிடமும் ஏற்படுத்த CVC அமைப்பு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் - மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துவது, உறுதி மொழி எடுப்பது ஆகியவையும் இவ்வாரத்தில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நம் மாணவ சமுதாயம், நம் வருங்காலம் என்பதை கருத்தில் கொண்டு, இந்த வாரத்தின் ஒரு நாளில் (அக்டோபர் 30 - நவம்பர் 4), காயல்பட்டினம் நகர பள்ளிகளில் நடக்கும் ASSEMBLY நிகழ்வில், அரசு மூலம் வெளியிடப்பட்டுள்ள உறுதி மொழியை - மாணவர்களை எடுக்க தெரிவிக்கும்படி பள்ளிக்கூடங்களின் தலைமை ஆசிரியர்களுக்கு - நடப்பது என்ன? குழுமம் சார்பாக இன்று கடிதம் கொடுக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 28, 2017; 6:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|