காயல்பட்டினம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள குளிர்சாதனப் பெட்டிக்குத் தேவையான ஸ்டெபிளைஸர் கருவி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கோமான் தெருவில் இயங்கும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் (URBAN PHC) - குளிர்சாதன பெட்டி இயங்காததால், அங்குள்ள மருந்துகளை பராமரிப்பதில் சிரமங்கள் உள்ளதாக - நடப்பது என்ன? குழுமத்தின் உறுப்பினர் ஒருவர் - சில தினங்களுக்கு முன்னர் - தகவல் பதிவுசெய்திருந்தார்.
அதனை தொடர்ந்து - குழும நிர்வாகிகள் நேரடியாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, அங்குள்ள நிலைய மருத்துவர் டாக்டர் பாத்திமா பர்வீன் அவர்களை சந்தித்து விபரங்களை கேட்டறிந்தனர்.
குளிர்சாதனப்பெட்டி நல்ல நிலையில் இருப்பதாகவும், STABILISER கருவி பழுதடைந்துள்ளதாக டாக்டர் பாத்திமா பர்வீன் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து - காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குளிர்சாதனப்பெட்டிக்கு தேவையான STABILISER கருவி ஒன்று நடப்பது என்ன? குழுமம் அனுசரணையில் - மருத்துவரிடம் அன்பளிப்புச் செய்யப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 27, 2017; 6:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|