பள்ளிக்கூட வாகனங்களை வேகமாக ஓட்டுவது, அதிக ஒலியுடன் ஒலிப்பானை (HORN) இயக்குவது உள்ளிட்ட புகார்கள் குறித்து, காயல்பட்டினம் நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினத்தில் பள்ளிக்கூடங்கள் மூலமாக, மாணவர்களுக்கு என வாகனங்கள் இயக்கப்படுகிறது.
இந்த வாகனங்களில் சில வேகமாக ஓட்டப்படுவதாகவும், சில வாகனங்கள் - மாணவர்களை ஏற்றுவதில் அவசரம் காட்டுவதாகவும், சில வாகனங்களில் HORN அதிக சத்தத்துடன் ஒலிக்கப்படுவதாகவும் - பெற்றோர்களும், பொதுமக்களும் - நடப்பது என்ன? குழுமத்திடம் - சமீப காலங்களில், சில புகார்களை தெரிவித்தனர்.
இதனை கருத்தில் கொண்டு, நகரில் வாகனங்கள் இயக்கும், பள்ளிக்கூடங்களின் தலைமை ஆசிரியர்களிடம் கீழ்க்காணும் கோரிக்கைகள் இன்று முன்வைக்கப்பட்டன.
(1) நகரில் உள்ள சாலைகளில் பயணம் மேற்கொள்ளும்போது, மிகவும் மெதுவாக இயக்க - வாகன ஓட்டுனர்களுக்கு - அறிவுறுத்தவும். குறிப்பாக, வளைவுகளில் - வேகமாக வாகனங்கள் ஒட்டப்படுவதாக, பெற்றோர்கள் தெரிவிக்கிறார்கள்; அதனை தவிர்க்க - வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுரை செய்யவும்
(2) வாகனங்களில் பொறுத்தப்பட்டுள்ள HORN -அதிகம் சத்தம் கொண்டதாக இருப்பதாகவும், வாகன ஓட்டுனர்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி, மக்கள் வாழும் பகுதிகளில் (RESIDENTIAL AREAS) இதனை பயன்படுத்தவாகவும், இதனால் - நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், வயோதிகர்களுக்கு சிரமமாக இருப்பதாகவும் பொது மக்கள் தெரிவிக்கிறார்கள். எனவே - வாகனங்களில் பொறுத்தப்பட்டுள்ள HORN கருவியை, தெருக்களுக்குள் பயன்படுத்த வேண்டாம் என வாகன ஓட்டுனர்களை அறிவுறுத்தவும்
(3) வாகனங்கள் - சராசரியாக எத்தனை மணிக்கு குறிப்பிட்ட இடத்திற்கு வரும் என்ற கால அட்டவணையை முற்கூட்டியே - பெற்றோர்களுக்கு தெரிவிக்கவும். இதனால் - பெற்றோர்கள், பள்ளி வாகனங்களில் தங்கள் பிள்ளைகளை அனுப்ப தவறி, ஆட்டோ போன்ற வாகனங்களில் அனுப்பிடும் சூழல் தவிர்க்கப்படும்
(4) வாகனங்கள் நிறுத்தப்படும் இடங்களிலும், வாகன ஓட்டுனர்கள் பொறுமையில்லாமல் மாணவர்களை அவசரப்படுத்துவதாகவும், ஓடிவந்து, ஓடும் வாகனத்தில் - ஆபத்தான நிலையில் மாணவர்கள் ஏறும் நிகழ்வுகளும் நடப்பதாகவும் - ஒரு சில பெற்றோர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே - மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு, வாகனத்தில் ஏற - மாணவர்களுக்கு போதிய அவகாசம் வழங்க அறிவுறுத்தவும்
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 28, 2017; 8:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|