காயல்பட்டினத்தில் நீட் பயிற்சி மையமாக அரசு மகளிர் மேனிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். சென்னையிலுள்ள அரசு கல்வித்துறை முதன்மைச் செயலருக்கு "நடப்பது என்ன?" குழுமம் வழங்கிய மனுவைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
தமிழக அரசு நடத்த திட்டமிட்டுள்ள - தூத்துக்குடி மாவட்டத்திற்கான NEET பயிற்சி மையங்கள் பட்டியலில், காயல்பட்டினம் விடுபட்டிருந்தது அதிர்ச்சியை அளித்தது. இது சம்பந்தமாக - கடந்த வெள்ளியன்று, தமிழக அரசின் கல்வித்துறை முதன்மை அரசு செயலர் திரு பிரதீப் யாதவ் IAS அவர்களிடம் நடப்பது என்ன? குழுமம், அதிருப்தியை தெரிவித்து - விரிவான மனுவை வழங்கியிருந்தது.
விபரங்கள் கேட்டறிந்த அரசு செயலர் - இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, நடப்பது என்ன? குழும நிர்வாகிகள், இன்று - தூத்துக்குடியில் தலைமை கல்வி அலுவலர் அவர்களை சந்தித்தனர். அவ்வேளையில் - காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, NEET பயிற்சிக்கான மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக - அவர் தகவல் தெரிவித்தார், எல்லாப்புகழும் இறைவனுக்கே.
காயல்பட்டினம் மாணவ சமுதாயம் சார்பாக, நடப்பது என்ன? குழுமம் மூலம் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று - நடவடிக்கை எடுத்த - தமிழக அரசுக்கும், கல்வித்துறையின் அரசு முதன்மை செயலர் திரு பிரதீப் யாதவ் IAS அவர்களுக்கும், மாவட்ட கல்வித்துறைக்கும் - மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 30, 2017; 2:45 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|