காயல்பட்டினம் நகராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் நுழைவாயில், புல்தரை, கழிப்பறை, பேவர் ப்ளாக் பதித்தல் ஆகிய பணிகளுக்காக 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தப் புள்ளி (டெண்டர்) அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 07ஆம் நாளன்று திறக்கப்படவுள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விளக்கும் நோக்குடுன் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
வளாகத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள - 40 லட்ச ரூபாய் மதிப்பிலான நான்கு பணிகளுக்கு டெண்டர் அழைப்பு விடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகள் - நவம்பர் 7 அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பணிகள் விபரம் வருமாறு:
(1) சிமெண்ட் தள பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி
மதிப்பீடு: 9.90 லட்சம் ரூபாய்
(2) புல் தரை, செடிகள் மற்றும் நீரூற்று அமைக்கும் பணி
மதிப்பீடு: 9.80 லட்சம் ரூபாய்
(3) பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் நவீன கழிப்பிடம்
மதிப்பீடு: 9.90 லட்சம் ரூபாய்
(4) நுழைவு வாயில் மற்றும் பிரதான கதவு அமைத்தல்
மதிப்பீடு: 9 லட்சம் ரூபாய்
இப்பணிகள் ஒவ்வொன்றும் தொடர்புடையது என்றாலும், 10 லட்சம் ரூபாய் மதிப்புக்கு மேலான ஒப்பந்தப்புள்ளிகள் - eTENDER முறைப்படி அழைக்கப்படவேண்டும் என்ற விதிமுறையை தவிர்க்க, நான்கு வெவ்வேறு பணிகளாக பிரிக்கப்பட்டு - இந்த டெண்டர் அழைப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
டெண்டர் அழைப்பு ஆவணங்கள் வருமாறு:-
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 2, 2017; 7:30 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்களுள் உதவி:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல் |