காயல்பட்டினத்தில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், கடந்த 30.10.2017. முதல் ஓரளவுக்கு மழைக்காலத்தை உணர்த்தும் வகையில் மழை பொழிந்து வருகிறது.
31.10.2017. அன்று 22.00 மணிக்குத் துவங்கி, அதிகாலை வரை இதமழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக, நேற்று (01.11.2017.) 20.10 மணிக்குத் தூறலுடன் துவங்கி, 21.15 மணிக்கு கனமழையாக உருவெடுத்து இரவு முழுக்க மழை கொட்டித் தீர்த்தது. இம்மழை காரணமாக, நகரில் இரவில் பெரும்பகுதி நேரம் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. வழமை போல சாலைகளில் மழை நீர் தேங்கிக் காணப்படுகிறது.
தீவுத் தெருவில்...
கொச்சியார் தெருவில்...
முதன்மைச் சாலையில் - எல்.கே. காலனி அருகில்...
தொடர்ந்து. இன்று 15.30 மணி துவங்கி சில நிமிடங்கள் சிறுமழை பெய்தது. நகரில் இன்று முழுக்க இதமான குளிர்ந்த வானிலை நிலவுகிறது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து நேற்று (01.11.2017.) வெளியிடப்பட்டுள்ள மழை பொழிவுப் பட்டியல் படி, காயல்பட்டினத்தில் – தூத்துக்குடி மாவட்டத்திலேயே மூன்றாவது அதிக அளவாக 84.00 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.
இன்று (01.11.2017.) வெளியிடப்பட்டுள்ள மழை பொழிவுப் பட்டியல் படி, காயல்பட்டினத்தில் மழை பொழிவு பதிவாகவில்லை.
இன்று 18.50 மணி துவங்கி மீண்டும் சிறுமழை பெய்து வருகிறது. |