காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 92ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 07.03.2019. வியாழக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
மார்ச் 29 அன்று இருபத்து மூன்றாம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, சென்னை கோடம்பாக்கம் ஜும்ஆ பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.உமர் ரிழ்வானுல்லாஹ் ஃபாழில் ஜமாலீ வழங்கினர்.
அண்ணலாரின் அழகிய வாழ்வியல் முறை, உடல் நலத்தைப் பேணல், அண்ணலார் காட்டிய மருத்துவ முறைகள் குறித்து உரைகளில் தகவல்கள் இடம்பெற்றன.
ரஜப் 24ஆம் நாள் (ஏப்ரல் 01) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எல்.ஹாமிதுல்லாஹ் ஃபாஸீ, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியின் கத்தீப் மவ்லவீ முஹம்மத் முஹ்யித்தீன் ஃபாஸீ ஆகியோர் வழங்குகின்றனர்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது. |