தூத்துக்குடி மாவட்ட கால்பந்து லீக் இறுதிப் போட்டியில் காயல்பட்டினம் கே.எஸ்.ஸி. அணி வென்று, ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்ட கால்பந்து லீக் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மண்டலங்களில் நடைபெறும். இவ்விரு மண்டலங்களில் முதல் இரண்டு இடங்கள் பெற்று வெற்றி பெறும் அணிகள் சூப்பர் லீக் என்னும் நாக் அவுட் சுற்று போட்டிக்கு தகுதி பெறும்.
இவ்வாண்டு காயல்பட்டினம் KSC, USC, சாகுபுரம் DCW, வீரபாண்டியபட்டனம் அணிகள், புண்னைக்காயல், நாசரேத் அணிகள், T- ஸ்போட்டிங், தூத்துக்குடி உள்ளடக்கிய திருச்செந்தூர் மண்டலத்தில் நடைபெற்ற லீக் போட்டிகளில் புள்ளிகள் பட்டியலில் KSC முதல் இடத்தையும், நாசரேத் இரண்டாம் இடத்தையும் பெற்று சூப்பர் லீக் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின .
தூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட அணிகள் உள்ளடக்கிய தூத்துக்குடி மண்டலத்திலிருந்து வில்ஷன் மற்றும் ஃபிரண்ட்ஸ் அணிகள் முதல் இரண்டு இடங்களை பெற்று சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றன.
சூப்பர் லீக் நாக் அவுட் போட்டிகள் கடந்த மார்ச் 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
முதலாவது போட்டியில் தூத்துக்குடி வில்ஷன் - நாசரேத் மர்காஸியஸ் அணிகள் மோதின. மர்காஸியஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது போட்டியில் காயல்பட்டினம் - KSC, தூத்துக்குடி ஃபிரண்ட்ஸ் அணிகள் விளையாடியதில், KSC அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
KSC - நாசரேத் மர்காஸியஸ் அணிகளுக்கிடையேயான இறுதி போட்டி மார்ச் 31ம் தேதி ஞாயிற்று கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இப்போட்டியில் KSC 2 - O என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தூத்துக்குடி மாவட்ட சாம்பியனாக தொடர்ந்து நான்காவது முறையாக முடிசூட்டப்பட்டனர். KSC அணியின் முன்கல வீரர் லத்தீஃபு முதல் பாதியில் ஒரு கோலும், பிற்பாதியில் மேலும் ஒரு கோலும் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். KSC அணியின் ஹனிஃபா சிறந்த முன்கல வீரராக தேர்வு செய்யப்பட்டு பரிசு பெற்றார்.
முன்னதாக இறுதி போட்டியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட KSC யின் தலைவர் ஹாஜி வாவு செய்யது அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு இரண்டு அணி வீரர்களையும் மைதானத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தூத்துக்குடி மாவட்ட கால்பந்து கழக பொருளாளர் திரு. பிரின்ஸ்டன், செயலாளர் ஆல்டிரின் மிராண்டோ, KSC தலைவர் ஹாஜி வாவு செய்யது அப்துல் ரஹ்மான், அதன் செயலாளர் பேராசிரியர் சதக் தம்பி மற்றும் மாவட்ட கால்பந்து நிர்வாகிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற, வெற்றிக்கு முனைந்த அணிகளுக்கு சுழற் கோப்பையும், வீரர்களுக்கு பரிசுகளையும் அளித்து வாழ்தினர்.
இறுதி போட்டியை காயல்பட்டினம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து திரலான கால்பந்து பிரியர்கள் மைதானத்திற்கு நேரில் வந்து ஆட்டத்தை கண்டு ரசித்தனர்.
KSC அணியினர் கடந்த 7 ஆண்டுகளில் திருச்செந்தூர் மண்டல அளவில் நடைபெற்ற கால்பந்து லீக் போட்டிகளில் 2013, 2014, 2015, 2017,2018,2019 ஆகிய ஆண்டுகளில் முதலிடத்தையும், 2016ம் ஆண்டு இரண்டாம் இடத்தையும் பெற்று தொடர்ந்து 7 முறையும் சூப்பர் லீக் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றனர். அதில் 2013, 2016, 2017, 2018, 2019ம் ஆண்டுகளில் சூப்பர் லீக் நாக் அவுட் போட்டிகளில் முதல் இடம் பெற்று மாவட்ட சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டு மாநில அளவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடதக்கது.
மாவட்ட கால்பந்து லீக் போட்டிகளில் தொடர் வெற்றிகளை குவித்து வரும் KSC அணியின் மகத்தான சாதனையை பாராட்டி தனது வாழ்த்துரையில் நிணைவு கூர்ந்தார் தூத்துக்குடி மாவட்ட கால்பந்து கழக பொருளாளர் திரு பிரின்ஸ்டன்.
KSC அணியின் பயிற்றுனராக செய்யது முஹியத்தின் மிக திறம்பட செயல்பட்டு வருகிறார். இளம் வீரர்களை உள்ளடக்கிய அவ்வணி வருங்காலங்களில் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
ஹாங்காங்கிலிருந்து...
முத்து இப்றாஹீம்
|