காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 92ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 07.03.2019. வியாழக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ஏப்ரல் 03 அன்று இருபத்து ஆறாம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, ‘அல்அஸ்ரார்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ வழங்கினார்.
நபிகளாரின் வாழ்வும், வஃபாத்தும் எனும் தலைப்பிலும், அந்நாள் அல்லாமா முஹம்மதிஸ்மாஈலுன் நஹ்விய்யுல் முஃப்தீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் நினைவு நாளாதலால், அவர்களது வரலாற்றுச் சரிதத்தை உள்ளடக்கியும் அவரது உரை அமைந்திருந்தது.
ரஜப் 27ஆம் நாள் (ஏப்ரல் 04) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையையும், அந்நாள் மிஃராஜ் நாள் என்பதால் அதுகுறித்த வரலாற்றையும் – முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரியின் செயலரும் – ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
|