ஏப்ரல் 18ஆம் நாளன்று தமிழகத்தில் ஒரே விடுத்தமாக நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், திமுக - அதிமுக கூட்டணிகளில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிகள் பங்கிடப்பட்டு, இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியலும் அண்மையில் அக்கட்சிகளால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
காயல்பட்டினத்தை உள்ளடக்கிய தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், பாரதீய ஜனதா கட்சியின் சார்பில், அதன் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.
இத்தேர்தல் களத்தில் – திமுக கூட்டணியின் சார்பில் அதன் மறைந்த தலைவர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழியும், அதிமுக கூட்டணியின் சார்பில் பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுவதால், இத்தொகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|