ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், 15.11.2019. வெள்ளிக்கிழமையன்று காயலர் சங்கம நிகழ்ச்சியாக நடைபெற்று முடிந்துள்ளது. அதன்போது நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றோருக்கும், அனைத்து மழலையருக்கும் – அந்நாட்டின் காவல்துறை அதிகாரியே முன்வந்து பரிசுகளை வழங்கியுள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.
எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 15ஆவது பொதுக்குழுக் கூட்டம் – 15.11.2019. வெள்ளிக்கிழமையன்று அபூதபீ – கலீஃபா தெருவிலுள்ள கேப்பிட்டல் பூங்காவில் குடும்ப சங்கம நிகழ்ச்சியாக நடைபெற்றது.
அபூதபீ, அல்அய்ன், மேற்கு மாகாணத்தின் இதர பகுதிகளிலிருந்தும் - மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்களும், துபையிலிருந்து – துபை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர்களுள் பலரும் காலை 10.30 மணியிலிருந்தே நிகழ்விடம் வரத் துவங்கினர். வந்தவர்கள் அனைவரும் பெயர் பதிவு செய்யப்பட்டு, சந்தா நிலுவையிலிருந்த உறுப்பினர்களுள் அந்நேரத்தில் செலுத்தியவர்களது தொகை பெற்றுக்கொள்ளப்பட்டதோடு, அனைவருக்கும் பங்கேற்புக்கான – வரிசை எண் அச்சிடப்பட்ட அடையாளச் சீட்டும் வழங்கப்பட்டன. நிகழ்விடத்தில் வந்தமர்ந்த பின் அவர்களுக்கு சூடான தேனீரும், சுண்டலும் பரிமாறப்பட்டன.
துவக்கமாக, மழலையர் & சிறுவர் – சிறுமியர் பங்கேற்ற திருக்குர்ஆன் ஓதல் போட்டி நடைபெற்றது. திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ள – மன்றத்தின் ஹாஃபிழ் உறுப்பினர்களும், சிறப்பு விருந்தினரும் நடுவர்களாகக் கடமையாற்றினர். ஜும்ஆ நேரம் வந்ததும் அருகருகே இருந்த பள்ளிவாசல்களில் அனைவரும் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றித் திரும்பினர்.
ஜும்ஆ தொழுகைக்குப் பின் முறைப்படி பொதுக்குழுக் கூட்டம் துவங்கியது. மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த, மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துபை காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஜே.எஸ்.ஏ.புகாரீ, காயல்பட்டினத்திலிருந்து வந்திருந்த – உறுப்பினர்களின் உறவினர்களான முஹம்மத் ஈஸா, அஹ்மத் முஹ்யித்தீன் ஆகியோருடன் ‘தாருத்திப்யான் நெட்வர்க்’ நிறுவனர் ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தியும், அனைவரையும் வரவேற்றும் மன்றத்தின் மக்கள் தொடர்பாளர் ஏ.ஆர்.ரிஃபாய் உரையாற்றினார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் மக்பூல் அஹ்மத் தலைமையுரையாற்றனார்.
மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு – செலவு கணக்கறிக்கையை டாக்டர் ஹமீத் யாஸிர் சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒப்புதலளித்தது.
சிறப்பு விருந்தினர்கள் முஹம்மத் ஈஸா, அஹ்மத் முஹ்யித்தீன் ஆகியோர் வாழ்த்துரையாற்றியதைத் தொடர்ந்து, ஆடிட்டர் ஜே.எஸ்.ஏ.புகாரீ மன்றப் பணிகள் சிறப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ் – மன்றத்தின் இதுநாள் வரையிலான செயல்பாடுகளைப் புகழ்ந்துரைத்ததோடு, உடல் நலனைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் அன்றாடம் பேண வேண்டிய நடைமுறைகள் குறித்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கி உரையாற்றினார்.
நன்றியுரையைத் தொடர்ந்து, மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எஸ்.முத்து அஹ்மத் மஹ்ழரீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. பின்னர், காயல்பட்டினத்திலிருந்து இக்கூட்டத்திற்கென வரவழைக்கப்பட்டிருந்த சமையலர் மொகுதூம் கைவண்ணத்தில் காயல்பட்டினம் பாரம்பரிய களறி சாப்பாடு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
நீண்ட இடைவெளிக்குப் பின் சந்தித்துக் கொண்ட அனைவரும் தமக்கிடையே பல வகைகளில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
நிறைவாக – பெரியவர்கள், பெண்கள், சிறுவர் – சிறுமியருக்கான விளையாட்டுப் போட்டிகள் தனித்தனியே நடத்தி முடிக்கப்பட்டது. தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. அதில், அபூதபீயின் காவல்துறை அதிகாரி கலந்துகொண்டு, மழலையருக்கும் – போட்டிகளில் வென்றோருக்கும் பரிசுகளை வழங்கினார். சிறப்பு விருந்தினர்கள் அடுத்தடுத்த பரிசுகளை வழங்கினர்.
ஏற்பாடுகளை, மன்ற நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
கீழ்க்கண்ட இணைப்புகளில் சொடுக்கி, படங்களைத் தொகுப்பாகக் காணலாம்!
https://photos.app.goo.gl/HTKwSaWtn5wQC5p36
https://photos.app.goo.gl/W4CwM4CcqrGQBbkT9
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
A.R.ரிஃபாய்
(மக்கள் தொடர்பு & செய்தி/ ஊடகத்துறை பொறுப்பாளர்)
படங்கள்:
சுப்ஹான் பீர் முஹம்மத் & ஹபீப்
[கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன @ 10:52 / 14.01.2020.] |