இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள – குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து இந்தியா முழுக்கவும் பல்வேறு எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் - 18.12.2019. புதன்கிழமையன்று 17.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அன்று காலையில் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. 03.01.2020. வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் - 650 மீட்டர் நீளமுள்ள தேசியக் கொடியைத் தலையில் சுமந்து பேரணியாகச் சென்று போராடினர்.
இன்று ஜும்ஆ தொழுகை நிறைவுற்றதும் நகரின் ஆறு ஜும்ஆ பள்ளிகளில் தொழுகையை நிறைவேற்றச் சென்ற பொதுமக்கள் – குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய கண்டன அட்டையை தமது சட்டைகளில் அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவும், தொடர்ந்து அணியப் போவதாகவும் தெரிவித்தனர்.
இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
[கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன @ 08:22 / 11.01.2020.]
1. Re:...இயற்கையும் செயற்கையும் posted bymackie noohuthambi (kayalpatnam)[13 January 2020] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46473
3 .1 .2020 அன்று நடைபெற்ற உணர்வுபூர்மான எழுச்சி மிக்க நமதூர் மக்கள் திரண்டு வந்து செய்த ஆர்ப்பாட்டத்துக்கும் இந்த வெள்ளிக்கிழமை செய்த ஆர்ப்பாட்டத்துக்கும் ஒரு வித்தியாசம் முன்னது இயற்கையானது பின்னது செயற்கையானது. இந்த அட்டைகள் அன்றைய தினமே மக்களின் சட்டைப்பைகளின் வெளியே தொங்கவிடப்பட்டிருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். சிரிப்பும் செழிப்பும் நிறைந்திருக்கும் நேரத்தில் அடையாளங்கள் குழம்பி போகும் சோதனையும் வேதனையும் சூழும் நேரத்தில் உண்மை உணர்வுகள் வெளிப்படும். மாற்று மத சகோதரர்களும் கலந்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய வெள்ளிக்கிழமை நமது பாரத பிரதமரை நமது முதலமைச்சரை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கும் நம்மை அவர்கள் வியந்து திரும்பி .பார்க்கும் நிலையை ஏற்படுத்தி இருக்கும் இந்த வெள்ளிக் கிழமை ஏதோ வேடிக்கை விளையாட்டை பார்க்கின்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கும். பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பதும் பேசக் கூடாத நேரத்தில் பேசுவதும் இரண்டுமே தப்புதான். தாமதமாக கிடைத்த அட்டையை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற யுக்தி ''நீங்கள் கெட்டிக்காரர்கள்தான் என்றாலும் நாங்கள் கேனயன்கள் அல்ல'' அல்ல என்று அவர்களை சொல்லவைத்திருக்கிறது
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross