காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பில் (மெகா) உறுப்பினராக இணைவதற்கான விண்ணப்பப் படிவம் இன்று ஜும்ஆ தொழுகை நிறைவுற்றதும் நகரின் 6 ஜும்ஆ பள்ளிவாசல்களின் வெளியிலும் பொதுமக்களுக்குப் பகிரப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
சமூக பணிகளில் பல ஆண்டுகள் அனுபவமிக்க ஆர்வலர்களால் - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா), 2016 ஆம் ஆண்டு - தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம் கீழ் - துவக்கப்பட்டது.
கடந்த 4 ஆண்டுகளில் - அரசு மூலமான சேவைகள், மருத்துவம், கல்வி, இளைஞர் மேம்பாடு உட்பட பல்வேறு துறைகளில் - இறைவனின் உதவிக்கொண்டு - வெற்றிகரமாக மெகா அமைப்பு பணியாற்றி வருகிறது. எல்லாப்புகழும் இறைவனுக்கே!
நடப்பது என்ன? - இதன் சமூக ஊடகப்பிரிவாகும்.
தனது பணியினை - மேலும் விரிவாக்கவும், ஆழமாக்கவும் - சமூக பணிகளில் ஆர்வமுள்ளவர்களை - பொது குழு உறுப்பினர்களாக இணைத்திட மெகா அமைப்பு முடிவு திட்டமிட்டுள்ளது.
நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும், பரவலாக உறுப்பினர்களை இணைக்கும் நோக்கில் - இன்று வெள்ளிக்கிழமை (ஜும்மா) தொழுகைக்கு பிறகு - விருப்ப படிவம் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த படிவம் கிடைக்க பெறாதோர், இணைக்கப்பட்டுள்ள PDF கோப்பினை அச்சிட்டு சமர்ப்பிக்கலாம்.
மேலும் - நகரின் கீழ்க்காணும் வியாபார ஸ்தாபனங்களில் இந்த படிவங்கள் கிடைக்கும்:
(1) யுனைடட் கார்ட்ஸ் அண்ட் ப்ரிண்ட்ஸ், ஐஓபி வங்கி அருகில்
(2) மாஸ்டர் கம்ப்யூட்டர் அகாடமி, அல்ஜாமியுல் அஜ்ஹர் ஜும்மா பள்ளி எதிரில்
(3) பதுரியா ஹோட்டல், கூலக்கடை பஜார்
(4) ஸ்டார் ரெடிமேட், தபால் நிலையம் எதிரில்
(5) முஹம்மது ஹஜ் சர்வீசஸ் & டிராவல்ஸ், பேருந்து நிலையம் எதிரில்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|