மருத்துவ கல்லூரிகளில் MBBS மற்றும் MD / MS பட்டங்கள் பயில - தேசிய அளவிலான நுழைவ தேர்வுகள் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா - இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் சாராம்சம் வருமாறு :-
1. தமிழக அரசு 2005 ஆம் ஆண்டு முதல் முயற்சி செய்து, 2007 - 2008 ஆம் ஆண்டில் நுழைவு தேர்வுகளை ரத்து செய்துள்ளது
2. இம்முடிவு வல்லுனர்கள் குழுவின் பரிந்துரை அடிப்படையில் எடுக்கப்பட்டது
3. நுழைவு தேர்வு கிராமப்புற மற்றும் சமுதாயத்தின் நலிந்த பிரிவு மாணவர்களுக்கு - பயிற்சி வகுப்புகளில் சேர அவர்களுக்கு சேர வசதி வாய்ப்புகள் குறைவு என்பதால் - கடினமான ஒன்று
4. தமிழக அரசின் பாடத்திட்டமும், தேசிய அளவிலான நுழைவு தேர்வுக்கான பாட திட்டமும் மாறுபடும். ஆகவே பயிற்சி வகுப்புகள் அவசியம் ஆகின்றது
5. நுழைவு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் கிராமப்புற மற்றும் சமுதாயத்தின் நலிந்த பிரிவு மாணவர்கள் பலர் பயன்பெற்றுள்ளார்கள்.
6. தமிழகத்தில் தற்போது 69 சதவீத ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. தேசிய அளவிலான நுழைவு தேர்வினால் ஒதுக்கீட்டிற்கு புதிய சிக்கல்கள் வரக்கூடும்
7. மேலும் MD/MS போன்ற பட்டங்களுக்கு - கிராமபுறங்களில் குறைந்தது மூன்றாண்டுகள் சேவை செய்த மருத்துவர்களுக்கு தமிழகத்தில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மேலும் அரசு கல்லூரிகளில் MD/MS பயின்ற மருத்துவர்கள் கட்டாயம் தமிழகத்தில் குறிப்பிட்ட ஆண்டுகள் சேவை செய்ய தமிழக அரசு உத்தரவாதம் தற்போது பெறுகிறது. ஆனால் நுழைவு தேர்வு முறையினால் இதனை அமல்படுத்துவதில் சிக்கல்கள் வரும்
8. மத்திய சுகாதார அமைச்சர் முன்னர் கொடுத்திருந்த உத்தரவாதப்படி - மாநில அரசுகளின் சம்மதத்துடன் தான் நுழைவு தேர்வுகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது மத்திய அரசு தன்னிச்சையாக நுழைவு தேர்வினை அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது
9. மத்திய அரசின் இம்முடிவை தமிழக அரசு கண்டிக்கிறது. மேலும் - நுழைவு தேர்வுகளில் இருந்து, தமிழகத்திற்கு விதிவிலக்கு வழங்க மத்திய அரசினை, தமிழக அரசு கோருகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் கடிதத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும். |