Re:... posted byALS Mama (Kayalpatnam)[06 December 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 42368
மனந்திறந்து எழுதிய மழைவெள்ள செய்திக்கு பாராட்டு மழை அளிப்போம்
A.L.S.இப்னு அப்பாஸ்
(இணையதள எழுத்தாளர்> நிரூபர்>
சமூக ஆர்வலர் & ஓவியர்)
காயல்பட்டினம்.
மறந்ததை உணர்த்திய மழை! சகோதரி உம்மு நுமைரா M.A., M.Phil., (Ph.D.,)
காயல்பட்டணம் தைக்கா தெருவைச் சேர்ந்த சகோதரியின் ஆக்கத்தை முதன் முதலில் படித்த போது வெள்ளத் தோடு நானும் இழுத்துச் சென்றது போல உணர்வை ஏற்படுத்தி இருந்தார்.
சுமார் 7 பக்கம் சென்னையின் வெள்ளக் காட்டை படம் பிடித்துக் காட்டினார். இறைவனின் கோபப் பார்வை ஒரு காரணம் என்று ஆலிமாவாக இருப்பதால் அறிந்து தெரிந்து எழுதி மெய்சிலிர்க்க வைத்தார்.
இவர்கள் மகளிர் கல்லூரி ஒன்றில் ஆசிரியை என்றும் அறிந்தேன். இவர்களின் எழுத்தாற்றலில் புதிய பாணி தனி நடை புதுமையாக படிக்கத் தூண்டியது. டிசம்பர் நான்கு தேதி வரை 1428 பேர்கள் படித்து இருப்பதும்> பத்து பேர் கருத்து மழை பொழிந்து இருப்பதும் அறிந்து சந்தோஷப்பட்டதற்கு காரணம் நான் இவர்களை போல கட்டுரையாளர் தான் எனது கட்டுரை டிசம்பர் 2 ல் எழுத்து மேடையில் வெளியாகி உள்ளது.
அது வெள்ளக்காடு காயலைவிட்டு இன்னும் ஏன் வெளியேற வில்லை என்ற தலைப்பில் ஒன்றரை பக்கமாக எழுதியவை இருநாட்களில் படித்தோர் உலகத்தர எண்ணிக்கை 620 க்கும் மேல் இந்த பதில் எழுதுவதற்குப் இன்னும் அதிகமானோர் நமது இணையதளத்தில் படிப்பார்கள் இரண்டு பேர் கருத்து பதிந்து இருந்தார்கள்.
இவர்களைப் போல மழை கட்டுரை என்றதாலும் காயல் தெருக்களில் இன்னும் வெள்ளம் தெருக்களில் ஆறுபோல தேங்கி நிற்பதால் வாகனங்கள் போகும் போது நடந்து செல்லும் மக்கள் ஆடையில் மேனியில் அசுத்த வெள்ள நீர் வாரி வீசப்படுகிறது தவிர்க்க முடியாத நிலையில்தான் இன்னும் கவனிக்கப்படாமல் வெள்ள நீர் தேங்கிய நிலையில் தூங்கிக் கிடக்கிறது. இதனால் மக்கள் உள்ளம் ஏங்கி தவிக்கிறது கவனிக்க யாரும் வரலே ஏன்? நமதூர் கவுன்சிலர்கள் எங்கே போய்விட்டார்கள்.
சென்னை வெள்ளம் குறித்து தொலைகாட்சியில் பலதிக்கிடும் சம்பவங்கள் மக்கள் மனதிலிருந்து இறக்கி வைத்தார்கள். காவிப்படையாம் மோடிப்படையினர் மாட்டிறச்சி சாப்பிடும் முஸ்லீம்களை பாக்கிஸ்தானுக்கு துரத்தி அனுப்ப ஆங்காங்கே கூக்குரல் போட்டது வட மாநிலம் ஒன்றில் மாட்டை வெட்டிய முதியவர் ஒருவரை அநியாயமாக கொன்ற கொடுமையை பிரதமர் கண்டித்தாரா? மௌன சாமியாராகி அவர்பல நாடு சுற்றி பரந்து போனாரே. ஹஜ்பெருநாள் என்பதே குர்பானி என்ற பெயரால் கிடா மாடுகளை பலிஇடும் நாள் தியாகத் திருநாள் இதை காவிப்படை காலித்தனமாக எதிர்த்ததே - இந்த மழை வெள்ள அழிவுக்கு காரணமாக இருக்கலாமோ என்று இந்த நேரத்தில் அப்பாவியும் அறிந்த மக்களும் பேசிகொள்கிறார்கள்.
நாடு எங்கிலும் மாடு வெட்டுவது முஸ்லீம் அவரவர் கேட்பாடு மாடு வெட்டியவனை பாக்கிஸ்தானுக்கு அனுப்ப சொன்ன காவிப்படை கூப்பாடு போட்டது சரியா? முஸ்லீம்கள் பாக்கிஸ்தானில் இருந்தா இந்தியா வந்தார்கள். சென்னையில் காவிப்படையினர் துவேஷ அணியில் முஸ்லீம்களை சாடியவர்கள் இந்த மழை வெள்ளத்தில் பள்ளி வாசலில் மனித நேயத்துடன் தங்கவைத்து உறைவிடம் உணவு உடை கொடுத்து வரவேற்றதாக முஸ்லீம் அல்லாத மக்களே தொலைகாட்சியில் பேட்டி தகவல் சொல்வதை கேட்டு மனித சமுதாயம் மெய் சிலிர்த்து போய்விட்டதை உணர்ந்து கொண்டார்கள்.
இந்தியாவின் ஒருமைபாடு என்பது ஜாதியை குறிப்பிட்டு தனியாக தாக்குவது சரிஅல்ல காவிப்படையின் கொடுமையான வார்த்தையால் முஸ்லீம் மக்கள் இறைவனிடம் கை ஏந்தி பிராத்தனை செய்ததின் விளைவாக சென்னையில் காவிப்படையையும் சூழ்ந்து இழுத்து அடித்து செல்லும் வெள்ளத்தை இறைவன் தந்து விட்டானா? என்று இப்போது மனம் பதைபதைக்கிறார்களாம் யாரையும் தாக்கும் வார்த்தையால் எந்த ஜாதியினரும் மனசும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதை காவிப்படை எனும் காலிப்படை உணர்ந்து கொள்ளட்டும்.
மனித நேயம்தான் இந்திய வளர்ச்சிக்கு ஆன்மீக தன்மைக்கு நல்லது. மழைகாலத்தில் அழகான கருத்தை மின்னல் போல் இடி போல் முழங்கிய கட்டுரையை தந்த சகோதரியை மனதார பாராட்டி வாழ்த்தி போர்வையை போர்த்துவோம் வாரீர்.
இவர்களை போல மற்ற சகோதரிகளும் கட்டுரை பலதரனும். எனது வெள்ளக்காடு கட்டுரை படித்து சகோதரிகள் கருத்து அனுப்புங்கள். எழுத எழுத எழுத்து மின்னும் பிரகாசிக்கும்.
Re:... posted byALS MAMA (KAYALPATNAM)[29 October 2015] IP: 61.*.*.* India | Comment Reference Number: 42108
A.L.S இப்னுஅப்பாஸ்
(இணையதள எழுத்தாளர்)
நூலகர்: சீதக்காதி நினைவு நூலகம்
தாயிம்பள்ளி வளாகம்
காயல்பட்டணம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
சகோதரர் அன்பின் அலாவுத்தீன் எழுதிய தனிமரம் தோப்பாகுமா? கட்டுரை படித்தேன். நமதூர் அருகிலுள்ள D.C.W. தொழிற்சாலை இடும் நச்சுபுகையினால் ஏற்படும் கேடுகுறித்தும், நமதூரின் இன்றைய ஒற்றுமை குறைவு குறித்தும் கவலை பட்ட மனதுடன், குன்றின் மீதுவைத்த விளக்குபோல், அல்லது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் சிந்தனைக் கருத்துகளை வைரவரியாக பதிவுசெய்துள்ளார்.
மக்கள் மனதில் அவரின் கருத்துகள் மாறாமல் இருக்க, நல்ல உதாரணங்களையும் இணைத்துள்ளார். நமதுரின் இன்றைய நிலையை பாருங்கள், தனது மகளுக்கு மாப்பிள்ளை தேடும்படலத்தில் மாப்பிள்ளை படித்தவரா? பண்புள்ளவரா? வேலையில் இருந்து சம்பாதிக்கிறாரா என்று முதலில் பார்ப்பது இல்லை.
அவர் எந்த கொள்கையை சார்ந்தவர் நம் கொள்கைக்கு ஒத்துவருவரா என ஆய்வு செய்து வருங்கால மாப்பிள்ளைகளை தேடுகிறார்கள்.
எந்த காரியத்திலும் வெற்றி பெற வேண்டுமானால் எல்லோரும் ஓரணியில் ஒன்று திரண்டு எதிர்ப்பு கொண்டால் தான் வெற்றிக்கனி சுலபமாக கிடைக்கும். நமதுரிலுள்ள பல்வேறு கொள்கைகளை பள்ளிவாசலில் பயானோடு வைத்துக் கொள்ளட்டும், தொழுது விட்டு வெளியே வந்ததும் நானும் நீயும் முஸ்லீம் சகோதரன்,அதனால் நாம் ஒற்றுமை எனும் கயிற்றை பற்றி பிடித்து கொள்வோம் வாரீர் என்ற இஸ்லாமிய வாஞ்சையுடன் மனம் திறந்து நடந்து கொண்டால் தான். நச்சுபுகைக்காக D.C.W. வை எதிர்த்து போராடமுடியும்.
தொழிற்சாலையை மூட சொல்ல வில்லை. இந்த தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் புகையினால் மக்கள் புற்று நோயிக்கு ஆளாவதையும் அதற்கு மாற்றாக ஒருவழியை அந்த தொழிற்சாலை எடுக்க சொல்வதே நமது கோரிக்கையாகும் விட்டு விட்டு தனிதனி அணியாக போராடுவதைக் காட்டிலும் ஊரிலுள்ளவர்கள் கொள்கையை ஒதுக்கி ஓரணியில் ஒன்றினைந்தால் அரசு காதுக்கு நமது போராட்டத்தின் நியாயமான சிந்தனைபுரியும்.
அக்கம் பக்கம் ஊர் மக்களிடமும் D.C.W. தரும் நச்சு புகையினால் ஏற்படும் தீமைகுறித்து ஆய்வு செய்து அங்குள்ள ஊர் தலைவருக்கு தகவல் தந்தால் நம் நியாயமான போராட்டத்தின் வெற்றியை அல்லாஹ்தருவான்.
Re:... posted byAlS Mama (Kayalpatnam)[15 October 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 42014
A.L.S. மாமா
முன்னால்: ப(h)லம் பத்திரிகை ஆசிரியர்
இணையதள எழுத்தாளர்/சமூகநல ஆர்வலர்
காயல்பட்டடிணம்.
அஸ்ஸலாமு அலைக்கும்:
2015 செப்டம்பர் 14 - ல் கவிஞர் முஸ்தாக் அஹமத் கவிதையான சமர் வாசித்தேன். 18ஆம் வரியில் காயல்நகரில் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்த பட்சம் ஒரு ஆலீம் ஒரு ஆலிமா - ஒரு ஹாபிழ் ஒரு ஹாபிழா வரிசைபடுத்தி பாராட்டி விட்டு கூடவே ஒரு புற்று நோயாளியும் இருப்பதாக கவி வரி நெஞ்சை தொட்டு கண்ணீர்யிடச் செய்து இன்றைய காயல் நிலை குறித்து எழுதி உள்ளீர்கள். உங்களின் இந்தகவிவரியை நமதூரில் பொது சேவை அரங்கில் உங்கள் பெயர் கூறி படித்து காட்டினார்கள். அரங்கில் இருந்தோர் இதயத்தில் இடம் பிடித்தீர். 64வது வரியில் வரும் காலத்தில் நட்ட மரங்களின் கூட்டுத்தொகை கொண்டே வரலாறு பதிவு செய்யும் என்றவரியும் மரத்தடியில் நின்ற நிழல் தரும் சுகம் போல் இருந்தது. என்னுடைய கட்டுரைகளில் மரம் வளர்க்கா விட்டாலும் பரவாயில்லை இருக்கும் மரத்தை வெட்டாதீர் என்று எழுதுவதுண்டு. நாம் அறிய வீதியில் நின்ற வேப்பை மரம் காணாமல் போயிற்று. அக்கரை இல்லாத மனிதர்களால் இது நடந்துவிட்டது. மரம் விடும் ஆக்ஸிஜன்தான் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் சுகம் தருவதோடு மழை அழைக்கும் ஒரு வேதியியல் பொருளாகும். இதில் வைட்டமின் நிறைந்திருப்பதை மக்கள் உணர்வதில்லை. நமதூர் அப்பாபள்ளி தெரு வழியாக போனால் வேப்ப மரநிழல் தரும் சுகத்துடன் உற்சாகமாக போக முடியும். வேப்பங்காற்று நோய் தீர்க்ககும் மருத்துவக் காற்று சென்ற காலத்தை மறப்போம். வருங்காலத்தில் வீதி எங்கும் வேப்ப மரம் வளர்ப்போம் வீட்டுத் தோட்டத்தில் பெருநெல்லி, மா, முருங்கை மரம் வளர்த்து நம் தேவைக்குபயன் படுத்தலாம். பள்ளிவாசல் மைய்ய வாடியில் பலா, நாவற்பழமரம், அத்திமரம், புளியமரம்அரசு ஆலமரம் மற்றும் மஞ்சனத்தி மருத்துவமரம் வளர்க்க சரியான இடம் பள்ளி நிர்வாகம் மனதில் இதை பதித்தால் வளரும் தெருவாசிகள் பலன் பெறுவார்கள். ஊரும் நலன்பெறும் செய்வார்களா?
Re:... posted byA.L.S. Ibnu Abbas (Kayalpatnam)[13 October 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 41995
A.L.S. இப்னு அப்பாஸ் (ALS மாமா) நூலகர் & தலைவர்
சீதக்காதி நினைவு நூலகம்,
தாயிம் பள்ளி வளாகம்இகாயல் பட்டணம்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
இதயங்கள் புரட்டப்படும் போது இஸ்லாம் ஒன்றே தீர்வு.............என்ற கட்டுரையை எம்.என்.எல் முஹம்மதுரபீக் (ஹிஜாஸ்மைந்தன்) அவர்களின் அழகான தகவலை படித்தேன். இது போல் சம்பவங்கள் என்னிடம் ஏராளமாக உள்ளது. திருச்செந்தூர் பிரதான வழியில் எங்கள் நூலகம் அமைந்துள்ளதால் அருகிலுள்ள ஊர் கோவிலுக்கு வந்தவர்கள் உடமைகளை பறிகொடுத்து விட்டு நமதூரின் முதல் பஸ் நிலையம் எங்கள் நூலகம் அருகில் வந்து இறங்கிய உடன் உதவிட நான் ஓடோடி சென்று பலரிடமும் விசாரிப்பது எனது வழக்கம். அதில் ஹிஜாஸ் மைந்தன் கூறுவது போல பலர் உடமைகளை இழந்து வருவார்கள் அருகில் பணம் வசூலித்து பழைய சில டிரஸ்கள் கொடுத்து அனுப்புவது வழக்கம்.
இஸ்லாம் என்பது மனித நேயம் வளர்க்கும் மாபெரும் அமைப்பு அதை நாம் சரிவர செய்வதில்லை.
Re:... posted byA.L.S. Ibnu Abbas (Kayalpatnam)[13 October 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 41993
A.L.S. இப்னு அப்பாஸ்; (ALS மாமா)
தாயிம் பள்ளி ஜமாஅத்
கல்வி (வைத்திய) பிரிவு அறக்கட்டளை தலைவர்
(சமூகநல ஆர்வளர் & ஓவியர்)
அஸ்ஸலாமு அலைக்கும்,
காவாலங்கா தலைவர் எம்.எஸ் ஷாஜஹான் துரை எழுதும் கட்டுரைகளில் புரட்சி கருத்துகள் வெடிக்கும். அவர்கள் கட்டுரையை ஒன்றுக்கு மேற்பட்டமுறையில் படித்தால்தான் புரிந்து கொள்ளமுடியும். ஒவ்வொருவருக்கும் பல்வேறு சிந்தனைகள் தோன்றும், எழுத்தாளர் மக்கள் மனதில் உள்ள கருத்தை வெளிப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அந்த வரிசையில் நமது எம்.எஸ் ஷாஜஹான்துரை சிறப்பிடம் வைப்பர்கள். அவர்கள் கட்டுரையை நான் படித்ததும் பதில் தர நினைப்பது உண்டு. நமதூர் தட்டச்சி அலுவலகம் சென்றால் வேலை அதிகம் நாளைக்கு வாங்களேன் என்று கூறியதின் காரணத்தால் அவை எனது பொது தொண்டின் காரணமாக மறதி ஏற்பட்டு என்னால் பதில் தர முடியால் போனதே உண்மை.
Re:... posted byALS IBNU ABBAS (Kayalpatnam)[21 October 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37852
மழை இட்ட கண்ணீரில், காயல் நகரில் மக்கள் விடும் கண்ணீர் காட்சி உங்கள் ஃபோட்டோவின் தொகுப்பில் கண்டு, அந்த மக்களுக்காக நாங்களும் கண்ணீர் வடிக்கின்றோம்.
காயல் நகர சமூக அமைப்புகள், மழையால் தேங்கி நிற்கும் பகுதிகளுக்கு உடனே சென்று, தேவையான நிவராண உதவிகளைச் செய்து தந்து, நமது கடமைகளை உரிய நேரத்தில் உதவி புரிவோம்.
Re:... posted byals (kayalpatnam)[11 June 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 35238
கண் பாதிப்பு இன்னும் சில தலைப்புக்கு கீழ் 5வது வரி மலை ஏறுபவர் "பனிப்பிரதேசம்" என்பதற்கு பதிலாக "பணிப்பிரதேசம்" என்று போடப்பட்டுள்ளது,பணி என்பது தவறாகும்,பனிஎன்பதே சரி
இந்த கட்டுரை எழுத அரவிந்த் கண் மருத்துவமனை,மதுரை வெளியிட்ட கண் ஒளி மாத இதழ் 2008 முதல் 2011 வரை உள்ள இதழ்களில் தகவல் சேகரிக்கப்பட்டதை வாசகர்கள் அறிந்து கொள்ளவும்.
Re:... posted byALS IBNU ABBAS (Kayalpatnam)[01 January 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 32246
அஸ்ஸலாமு அழைக்கும்,பரிமார் தெரு பெண்கள் தைக்கா கடைபள்ளி ஜமாத்துக்கு சொந்தமானது என்று கட்டுரையோடு சேர்த்து படிக்கவும்.
இந்த பெண்கள் தைக்காவை உருவாக்க பரிமார் தெரு ஜமாத்தை சார்ந்த பெரியவர்களும் இளைஞர்களும் தங்களின் பங்கை இறைவனின் பணிக்காக தந்தார்கள். குறிப்பாக இந்த தெருவை சார்ந்த கிதுறு முஹம்மது, குன்னா பொண்ணு அவர்களின் மகன் பொது நல சேவகர் கே.எம்.காதர் அவர்களின் பங்கு அதிகமானது என்ற தகவலை பத்தாம் வார்ட் உறுப்பினர் பதுருள் ஹக் இந்த கட்டுரையை படித்த பின்னர் பாராட்டி தகவல் தந்தார்.
Re:... posted byALS IBNU ABBAS (kayalpatnam)[21 December 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 32141
அஸ்ஸலாமு அழைக்கும்,ரில்வான் சென்னை உங்கள் ஆங்கில கருத்து கண்டேன்,இயேசு கிறிஸ்து பிறப்பு குறித்து விபரம் தந்துள்ளீர்கள்,நன்றி.நான் ஆதரங்களுடன் தான் எதையும் எழுதுவது வழக்கம்.
தினமணி வாரமலரில் இந்த விவரத்தை படித்தேன்,டிசம்பர் மாதம் பிறந்தவர்கள் முக்கிய தினங்கள்,முக்கிய நிகழ்வுகள் கீழே படியுங்கள்
1. நினைவு தினங்கள் :
டிசம்பர் 2 முதல் 31 வரை 17 உலக தலைவர்கள் பிறந்திருக்கிறார்கள்.
2. முக்கிய தினங்கள்:
டிசம்பர் 1 முதல் 26 வரை 11 தினங்கள் உள்ளன,அதில் டிசம்பர் 26 சுனாமி நினைவு தினம்.
3. முக்கிய நிகழ்வுகள்:
டிசம்பர் 1 முதல் 27 வரை 10 நிகழ்வுகள்
27/12/1911 ல் காங்கிரஸ் மாநாட்டில் தேசிய கீதம் "ஜென கண மண......."முதலில் பாடப்பட்டது,
4.முக்கிய பிரமுகர்கள் பிறந்த தினம் :
டிசம்பர் 2 முதல் 30 வரை 25 முக்கிய உலக பிரமுகர்கள் பிறந்திருக்கிறார்கள்
டிசம்பர் 25 0001 இயேசு கிறிஸ்து(கிருஸ்துவ மத ஸ்தாபகர்) பிறந்த தினம்
(ஆதாரம் 24/11/2012 தினமணி சிறுவர்மணி வார இதழ்
பக்கம் 12 முதல் 15 வரை)
Re:... posted byALS IBNU ABBAS (kayalpatnam)[10 December 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 31910
அஸ்ஸலாமு அழைக்கும், இலங்கை கொழும்பு நகரின் காவா லங்கா அமைப்பின் தலைவர் மரியாதைக்குரிய M .S .ஷாஜஹான் துரை அவர்கள் எழுதிய கட்டுரையை படிக்கும் போது திகில் உண்டாக்கியது, அடுத்த வரி என்னாகுமோ என்ற அச்சமும் மனதில் ஏற்பட்டது, அனைத்து முஸ்லிம் ஆண், பெண்கள் படிக்க வேண்டிய அருமையான கட்டுரை.
இஸ்லாம் என்பது தீவிரவாதத்தை ஒரு போதும் ஆதரிப்பது கிடையாது, இஸ்லாத்தில் பிறந்த மலேசியா ஆயிஷா பாலகிருஷ்ணன் சந்திர என்ற தீவிரவாத அமைப்புகளுடன் எப்படியோ சூழ்நிலைக்கைதியாக சிக்கி உள்ளார், இக்கட்டுரையை படிக்கும் போது எல்லா பெண்களுக்கும் ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும்.
முஸ்லிம் பெண்களையும், ஆண் வாலிபர்களையும் திசை திருப்பி செல்லும் இவர்கள் போல் பலர் உலகில் மறைந்து வாழ்கிறார்கள். அப்பாவி முஸ்லிம் ஆண், பெண்கள் மாட்டிக்கொள்ளும் போது அவர்களை தீவிரவாதிகளாக ஜோடிக்கப்பட்டு பிற சமுதாயத்தில் காட்டப்படுகிறது, ஆனால் எந்த முஸ்லிமும் தீவிரவாத போக்கை அன்றும் சரி, இன்றும் சரி என்றும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இஸ்லாம் உலகில் வாழும் மக்களுக்கு அமைதியையும் சமாதானத்தையும் போதிக்கிறது, அதனால் அது வேகமாக பரவி வருகிறது, இதனை தாங்கிக்கொள்ள முடியாமல் திசை திருப்புவோரை நாம் கவனமாக மேற்கொள்ள வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross