சுபைதா பள்ளியின் முதல் மாணவியான WAVOO.U.F.AYSHA பள்ளியின் தாளாளர் ஹாஜி.வாவு.காதர் சாகிபு அவர்களின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. எனக்கு தங்கை முறையாகும்.
Re:... posted byLUKMAN MOULANA (JAIPUR)[13 April 2016] IP: 117.*.*.* India | Comment Reference Number: 43510
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை விசால வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளை மறுமையில் நல்லடியார்களுடன் சுவனத்தில் இருக்க செய்வானாக ஆமீன்.
அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்
( செய்தியில் ஒரு சின்ன திருத்தம் : அன்னாரின் வயது 98 )
அல்லாஹ் பாதுகாத்தான் ...! posted byB.M.LUKMAN MOULANA (JAIPUR )[07 May 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 34814
அஸ்ஸலாமு அலைக்கும்.இந்த புனித சபையில் பழைய கட்டிடம்தான் விழுந்து இருக்கிறதே தவிர எந்த ஒரு இரத்த சேதத்துக்கும் இடமில்லாமல் மக்கள் அந்த இடத்தை விட்டு அகன்று சிறிது நேரத்தில் இந்த சம்பவம் நடந்திருப்பது அல்லாஹ் சுப்ஹானத்தாஆலா இந்த சபையை தன்னளவில் எந்தளவு புனித படுத்தியுள்ளான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.காயல்வாசிகள் கொடுத்து வைத்தவர்களே மாஷாஅல்லாஹ் ...!
சரியான கணிப்பு ...! posted byB.M.லுக்மான் மௌலானா (ஜெய்ப்பூர் )[19 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32573
2014 பாராளுமன்ற தேர்தல் குறித்த கட்டுரையாளரின் அலசல் மிகச் சரி. ஏற்கனவே 2004 லிலும் இந்தியா ஒளிர்கிறது என்று மிக ஆர்ப்பாட்டமாக களமிறங்கிய அக்கட்சி மோசமான தோல்வியையே சந்தித்தது. செய்தி ஊடகங்கள் தங்களுக்கு அனுகூலமான கட்சியை கூவி கூவி விற்கத் தொடங்கி இருப்பது ஜனநாயகத்துக்கு பிடித்த கேடு. இதில் தொழில் முதலைகளும் தங்களுக்கு வசதியான ஆட்சி அமைய கோடிகளை வாரி இறைப்பதும் அரசியல் சாபம் !
ஆனால் - தமிழ்நாடு , கேரளா ,ஆந்திரா ,உ.பி,பீகார் , போன்ற மாநிலங்களில் மாநில கட்சிகளின் ஆளுமை ஓங்கி இருக்கும் காலம்வரை இனி தனியொரு கட்சி 275 இடங்கள் அல்ல அதில் பாதி இடங்களை கூட வெல்ல முடியாது. அதிலும் பாஜக தனியாக 200 சீட்களை பெறாதவரை மோடி போன்றவர்கள் அரியணை ஏறுவதென்பது பகல் கனவு கூட காண முடியாது.
(எனது தனிப்பட்ட கருத்து: எப்பாடு பட்டாவது ஒரு ஆறு மாதத்துக்கு மோடி பிரதமர் பதவியில் அமர வேண்டும் - அப்போதுதான் அவரின் இயலாமையை இந்த நாடு உணரும். பாஜக எனும் கட்சியே இந்திய அரசியலையும் விட்டு காணாமல் போய்விடும். ஆனால் அப்படி ஒரு பேச்சுக்கு கூட அவரது ஆட்சி அமைவது எனக்கு புலப்படவில்லை!)
காயல் நகரம் ஒரு தலைவரை இழந்தது. posted byB.M.லுக்மான் மௌலானா (ஜெய்ப்பூர் )[17 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32018
அஸ்ஸலாமு அலைக்கும்.எங்கள் அன்பு தோழ அப்பா பெரியவர் உவைஸ் அப்பா அவர்கள் மரணச்செய்தியறிந்து மிக்க கவலைக் கொண்டோம்.( இன்னாலில்லாஹி வின்னா இலைஹி ராஜிவூன் )
பெரியவர் அவர்களோடு என் சிறு வயது முதல் பழகும் வாய்ப்பு பெற்றவன் என்ற முறையில் எனக்கு பல விசயங்கள் என் நினைவலைகளில் ஓடி மறைகிறது.
சிறந்த நுண்ணறிவும் , பொது விசயங்களில் மிக்க அக்கறையும் அவாவும் கொண்டு திகழ்ந்த அன்னாரிடம் நாங்கள் கற்றுக்கொண்ட உலக அறிவு நிறைய.சில பல விசயங்களில் இளைஞர்களுக்கே உண்டான வேகத்தோடு நாமெல்லாம் இருக்கையில் அதையெல்லாம் முறையோடு நெறிப்படுத்தி இந்த பிரச்சினைகளினால் எதிர்காலத்தில் என்ன எதிர்விளைவுகள் ஏற்படும் என்பதை நமக்கு புரிய வைப்பதில் வல்லவர் ஆவார்கள்.
நமது வயதையொத்த அல்லது அதை மிஞ்சிய அவர்களது அனுபவ அறிவு கொண்டு நம் ஊர் விசயங்களில் நல்ல பல முடிவுகளை எடுத்ததன் மூலம் இந்த ஊரின் வரலாற்று ஏஏடுகளில் அழியா பெயரும் தவிர்க்க முடியா தனி இடமும் பெற்று திகழ்ந்தார்கள். நமதூரின் பழமையானதும் முதன்மையானதும் ஆன பெரிய பள்ளிவாசலில் அமைந்த சதுக்கையின் கடைசி தூணாக திகழ்ந்த அன்னார் அவர்களின் சேவைகளை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்தி அதற்கு பிரதிபலனாக மறுமையில் சிறந்த உயர்நத பதவிகளை வழங்குவானாக.ஆமின்.
அன்னாரை இழந்து தவிக்கிற அவர்கள் குடும்பத்திற்கும் அழகிய பொறுமையை அல்லாஹ்வழங்குவானாக.ஆமின்.இன்னுமொரு சிறந்த தலைவரை இந்த காயல் மண்ணிற்கு அல்லாஹ் அடையாளம் காட்டுவானாக.ஆமின்
லுக்மான் காக்காவிற்கு இந்த லுக்மான் மௌலானாவின் வாழ்த்துக்கள்...! posted byB.M.LUKMAN MOULANA (JAIPUR)[17 June 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19404
அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் தன்னிலை விளக்கம் மிக அருமை.அந்த ஒலிநாடாவில் கேட்ட குரல் யாருடையது என்று விளங்காத எங்களைப் போன்ற சாமான்யர்களுக்கு தங்களின் ஒரு தற்காப்பு நடவடிக்கையாக அதை எங்களால் புரிந்துக் கொள்ள முடிந்தது.பொதுவாழ்வில் தவறு செய்தவர்களை விட தவறு செய்யாதவர்கள் பயப்படும் காலம் இது.எனவே உங்கள் சுய விளக்கம் இங்கே முக்கியமே.அது உங்கள் அடையாளமாகவும் பிற்காலத்தில் உணரப்படும்.
அதே வேளை,தலைவியைப் பற்றிய தங்கள் கருத்து கொஞ்சம் அதிகப்படியோ என்றே எனக்கு தோன்றுகிறது.தனது நிர்வாகத்தில் தவறுகள் நடந்துவிடக்கூடாதே என்ற முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருக்க நினைத்ததே இதற்கெல்லாம் காரணமாக இருக்கலாம்.அவர்களைப் போலவே,தவறு செய்யக்கூடாது என்ற ஒரே நேர்கோட்டில் பயணிக்கிற நீங்களே அவர்களை குறை கூறுவது (அதுவும் இந்த இடத்தில்) சற்றும் பொருந்தா ஒன்று.
அந்த ஒலிநாடாவை கேட்டீர்கள்தானே...... அது போன்ற சிங்கங்களுக்கு மத்தியில் காட்டின் தலைமை பதவியில் அமர்ந்த மானின் நிலமையில்தான் தலைவி அவர்களை பார்க்கிறேன். கடந்த முறை தலைவராக இருந்த பெரியவர் அவர்களையே இந்த சிங்கங்கள் படுத்திய பாடு உங்களுக்கு தெரியும்தானே...
அல்லாஹ்வின் பெயரால் பதவி ஏற்ற உங்களின் நேர்மை உங்களுக்கு பெருமை அல்ல அது கடமை...அது தவறியவர்களுக்கு அது சிறுமை...!
Re:காயிதேமில்லத் இளைஞர் சமூக... posted byB.M.LUKMAN MOULANA (JAIPUR)[07 June 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19206
அல்ஹம்துலில்லாஹ் . . .! சில்வர் ஜூப்ளியை நெருங்கிவிட்டதா எங்கள் அமைப்பு .மிக பிரமிப்பாக உள்ளது. எல்லாம் வல்ல இறைவன், கியாமத் நாள் வரை சமூக சேவைகளை முழுமையாக செய்யக்கூடிய அமைப்பாக திகழ எங்கள் அமைப்புக்கு அருள் புரிவானாக.ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross