செய்தி: ஜன. 14 அன்று சென்னை புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளார் சாளை பஷீரின் ‘மலைப்பாடகன்’ நூல் - பூவுலகின் நண்பர்கள் சார்பில் வெளியீடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பூவுலகின் நண்பன்… posted byஅ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்)[14 January 2018] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45979
பஷீர் காக்கா & எஸ்.கே. காக்காவின் எழுத்துகளை வாசித்து எழுதிட பழகியவன் நான். வெறுமனே எழுத்துக் கலையைப் பயில்வதோடு நில்லாமல், ‘எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு’ அமைப்பின் சீரிய பணிகளிலும் ஈடுபட்டு, பஷீர் காக்காவிடம் நல்ல பல வாழ்வியல் படிப்பினைகளையும் பெற்று வருகிறேன், அல்ஹம்துலில்லாஹ்.
இந்த புத்தக வெளியீட்டு விழா செய்தியினை தொகுத்து எழுதும் பொழுது, எனது முதன்முதல் நூலை வெளியிடுவது போன்று உணர்ச்சிவயப்பட்டேன்.
பஷீர் காக்கா இதுபோன்று பல்வேறு நல்ல நூல்களை வெளியிட இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். இத்தகைய முயற்சிகள் என் போன்ற இளையோருக்கு, இலக்கியத் துறையின் மீதான ஆர்வத்தை நிச்சயம் தூண்டும்.
செய்தி: மழலையர், பெரியோருக்கான விளையாட்டுப் போட்டிகள், களறி விருந்துடன் நடந்தேறியது பெங்களூரு கா.ந.மன்றப் பொதுக்குழு! காயலர்கள் திரளாகப் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நன்றியும் வாழ்த்துகளும்!!! posted byஅ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்)[25 December 2017] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45953
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு
பொதுக் குழு நிகழ்வு குறித்து அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.
அரபு வனப்பெழுத்து வரைகலை முகாமின்போது, மற்ற இரு அமைப்புகளுடன் கைகோர்த்து, பெங்களூரு காயல் நல மன்றம் பெரும்பங்காற்றியது.
அல்-ஹாஃபிழ் அப்துல்லாஹ் காக்காவின் பங்களிப்பு மிகவும் சிறப்பானதாக இருந்தது. அவர்களின் பணியை தகுந்த நேரத்தில் கண்ணியப்படுத்தியதை கண்டு, இம்மன்றத்தின் முன்னாள் உறுப்பினர் என்ற முறையில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இவ்வமைப்பின் தலைவர் ஹனீவெள் இப்றாஹீம் காக்கா & மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்!
செய்தி: பொழுதுபோக்கு அம்சங்களுடன் விமரிசையாக நடைபெற்றது கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்! மன்றத்திற்கு புதிய தலைவர் ஒருமனதாகத் தேர்வு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துகளும் பாராட்டுகளும் posted byஅ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்)[18 December 2017] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45944
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஹாஜி யூனுஸ் காக்கா அவர்களின் தலைமையில், இம்மன்றம் புதுமையான பல முயற்சிகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
உணவே மருந்து, இயற்கையோடு இணைவோம், அரபு வனப்பெழுத்து வரைகலை ஆகிய மூன்று பெருநிகழ்வுகளில் - காக்காவுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றதற்காக, இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். இந்நிகழ்வுகளின் போது, காக்காவிடம் நான் கற்றுக்கொண்ட பல நற்பண்புகளுள் மிக முக்கியமான மூன்று படிப்பினைகள் இதோ: உயரிய நோக்கங்கள், இலக்கை நோக்கி தொடர்ந்து தளராமல் நகர்தல் & செயல்நேர்த்தி.
நெருக்கடியான பல தருணங்களில்; குறிப்பாக, நிகழ்வுகளுக்கான செலவுகள் உத்தேச மதிப்பீட்டிலிருந்து மிகுதியாகும்போது, அமைதியான முறையில் அழகாக வழிகாட்டினார்கள்.
வருங்காலங்களிலும் காக்காவின் பணிகள் தொடர இறைவன் அருள்புரிவானாக! புதிதாக பொருப்பேற்றுள்ள தலைவர் மீரான் காக்கா அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
நூலாக மாற வாழ்த்துகள் posted byஅ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம், சஊதி அரெபிய்யா)[05 November 2017] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45880
அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,
அருமையான ஒரு பயணத்தின் பட்டறிவுகளை பகிர்ந்திட முன்வந்தமைக்கு ஜஸாக்கல்லாஹூ ஹைரன். இரசிக்கும்படியாக அமைந்த இந்த முன்னுரையானது, இத்தொடர் எந்தக் கோணங்களிலெல்லாம் விரியும் எனும் எதிர்பார்ப்பை மிகுதியாக்குகிறது.
இக்கட்டுரைகளின் தொகுதியை பிற்காலத்தில் ஒரு நூலாகவும் வெளியிடுமாறு வேண்டுகிறேன். வாழ்த்துகள்!
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் அவர்களின் இந்த ஒற்றை நபிமொழியே, நான் தவறிலைத்து விட்டதை நன்குணர்த்துகிறது:-
یقولون یثرب وھی المدینة
They call it Yathrib but it is Madina. [Bukhari, 1:252]
இந்த கூடுதல் தகவலினை கட்டுரையின் பின் குறிப்பாக பதிவிட இணையதள நிர்வாகிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
எனது அறியாமையினால் உண்டான இந்த தவறுக்காக இறைவனிடம் தவ்பா கோருகிறேன். வல்ல அல்லாஹ் எனது பிழைகளை பொருத்தருள துஆ செய்யவும். அவசியமான தருணத்தில் அழகான முறையில் கருத்தினை பதிவிட்ட சகோதரர் முஹம்மது நூஹூ அவர்களுக்கு இறைவன் ரஹ்மத் செய்வானாக!
Moderator: கட்டுரையாளர் வேண்டுகோளுக்கிணங்க, இவ்வாசகம் கட்டுரையின் அடியில் சேர்க்கப்பட்டுள்ளது.
Re:... posted byஅ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்)[09 March 2017] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45336
ஷமீம் காக்காவின் “தலாக்! தலாக்!! தலாக்!!! - வெறிக்கூச்சலும் வெளிச்சமான உண்மையும்!!!” துவங்கி, சகோதரி பின்த் மிஸ்பாஹீயின் “அவசிய திருத்தமும், அழகிய தீர்வும்” என தொடர்ந்து, சகோதரி உம்மு நுமைராவின் “ஹாசினிகளைப் பாதுகாப்போம்” வரை,
சமீபகாலமாக பெண்ணிய கட்டுரைகள் வலைதளத்தில் அதிகம் பதிவிடப்படுவது சமூகத்திற்கு ஆரோக்கியமானதே.
நம் வீட்டினுள் புகும்வரையிலும் எந்த ஒரு பிரச்சனையையும் வெறும் செய்தியாகவே பார்க்கும் மனப்போக்கை இவை மாற்றிட உதவிடும்.
ஒரு சமுதாய பிரச்சனையை வருத்தத்தோடு விவரிக்கும் இக்கட்டுரையின் ஆசிரியர், அதனை களையும் தீர்வையை சுட்டிக்காட்டியிருப்பது பாராட்டுக்குறியது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross