கத்தர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் பொழுதுபோக்கு அம்சங்களுடன் விமரிசையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மன்றத்தின் புதிய தலைவராக கே.எம்.எஸ்.மீரான் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
கத்தர் காயல் நல மன்றத்தின் 31ஆவது பொதுக்குழுக் கூட்டம் 10.11.2017 வெள்ளிக்கிழமையன்று காலை 11.00 மணி முதல் 3.30 மணி வரை, கத்தர் Messaid (Umm Sayyid) Park இல் வைத்து நனி சிறப்புடன் நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்...!!!
புறப்பாடு:
மன்ற உறுப்பினர்கள் குடும்பத்துடன் தத்தம் வாகனங்களில் நிகழ்விடத்திற்கு வந்தனர். வாகன வசதி இல்லாதோருக்கு வாகனங்கள் வைத்திருப்போர்கள் பொறுப்பேற்று சிரமமின்றி அழைத்து வந்தனர்.
நிகழ்வின் துவக்கமாக, உறுப்பினர் பதிவு மற்றும் சந்தா சேகரிப்பு ஆகிய பணிகளை, மன்றப் பொருளாளர் ஹல்லாஜ் மற்றும் துணைப் பொருளாளர் ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன் ஆகியோர் நெறிபடுத்தினர்.
பொதுக்குழுக் கூட்டம்:-
ஜும்மா தொழுகையை நிறைவேற்றிவிட்டு அனைவரும் குறித்த இடத்தில் சங்கமித்தனர். மன்ற செயலாளர் M .N . முஹம்மது சுலைமான் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தோரை வரவேற்று நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். மன்ற உறுப்பினர் ஹாபிழ் சொளுக்கு முஹம்மது ஜெமீல் அவர்கள் இறைமறையின் சில வாசகங்களை ஓதி இனிதே துவக்கி வைத்தார்.
மன்றத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர் சோனா முஹ்யத்தீன் அப்துல் காதர் மற்றும் பாஜுல் கரீம் ஆகியோர் முன்னிலை வகிக்க, மன்ற தலைவர் முஹம்மத் யூனுஸ் அவர்கள் இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றார்.
இரங்கல்:
மன்ற உறுப்பினர் சகோதரர் நிலார் அவர்களின், மாமியார் அவர்களின் வஃபாத்திற்காக இரங்கல் தெரிவிக்கபட்டு அன்னாரது மறுமைக்காக ஹாபிழ் முஹம்மது லெப்பை ஆலிம் அவர்கள் துஆ ஓதினார்கள்.
கூட்ட நிகழ்வுகள்:
வழமைபோல், "கவிக்குயில்" ஃபாயிஸ் அவர்களின் இனிய இன்னிசை பாடலுடன் கூட்டம் ஆரம்பமானது. மன்றச் செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் வரவேற்புரையாற்றினார்.
தலைமையுரை:-
இந்த ரம்மியமான பொழுதில் இங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த அனைவரையும் துவக்கமாக வரவேற்றுப் பேசிய தலைவர் யூனுஸ் அவர்கள் மன்றம் செய்த சேவைகளை பட்டியலிட்டு அழகுற எடுத்துரைத்தார்.
வளைகுடா நாடுகளிலே குறைவான உறுப்பினர்களை கொண்டு நிறைவான பணிகளை செய்து வருகிறது கத்தர் நலமன்றம். மக்கள் பணியில் நம்மன்றம் 10ஆவது ஆண்டில் பயணிப்பதில் பெருமிதம் கொள்வோம். மன்ற செயல்பாடுகளை உறுப்பினர்கள் யாவரும் அறிந்திருந்தாலும் புதிய உறுப்பினர்களின் வருகை அதிகரித்துள்ளதை கருத்திற்கொண்டு நம் செயல்பாடுகளை மீண்டும் ஒருமுறை விளக்கி கூற ஆசைபடுகிறேன். இதுநாள் வரை மன்றம் கல்வி, மருத்துவம் மற்றும் அவசரகால உதவி என்ற கட்டமைப்புகளில் செயலாற்றி வருகிறது. கல்வி மற்றும் மருத்துவத்திற்கு என்று பிரத்தியேக செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுளார்கள். அது சார்ந்த உதவிகளை செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.
செயல்திட்டங்கள்:
1) உலக காயல் நல மன்றங்களின் மருத்துவத் துறைக் கூட்டமைப்பான ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபர் அறக்கட்டளையின் புதிய நிர்வாக குழுவுக்கு மன்றம் வாழ்த்து தெரிவித்து கொள்கிறது
2) கல்வி திட்டத்தின் கீழ் நம்மன்றம் செய்து வந்த இலவச சீருடை திட்டத்தை நடப்பாண்டில் பயனாளிகளின் தேவையை கருத்திற்கொண்டு இத்திட்டத்தை அனைத்து காயல் நல மன்றங்களையும் ஒன்றாக கூட்டுத் திட்டமாக செயல்படுத்தினோம். இறைவனுக்கு விருப்பமான இந்த நல்ல திட்டத்திற்கு உறுதுணை புரிந்து ஆதரவு அளித்த அனைத்து காயல் நல மன்றங்களுக்கும், சிறப்புற செயலாற்றிய மன்ற செயலாளர் அவர்களுக்கும், இக்ராஃ நிர்வாகி ஜனாப் ஹாஜி தர்வேஷ் உள்ளிட்ட அனைவருக்கும் இத்தருணத்தில் மன்றத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
3) தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் & இக்ராஃ கல்விச் சங்கத்துடன் இணைந்து கடந்த 8 ஆண்டுகளாக நகர பள்ளிகளுக்கிடையில் வினாடி-வினா போட்டியை தமிழகத்தின் தலைசிறந்த வினாடி-வினா போட்டி நடுவர்களை கொண்டு நடத்தி வருகிறோம். இந்த வருடம் நடைபெற்ற வினாடி வினா போட்டியை வெகுசிறப்பாக நடத்திட உறுதுணையாய் இருந்த நல்லுள்ளங்களான ஹாஜி தர்வேஷ், சகோ MS ஸாலிஹ், சகோ KMT சுலைமான், சகோ SK சாலிஹ் மற்றும் மன்றத்தின் முன்னாள் உறுப்பினர் "வினாடி வினா" பிரபலம் சகோ கத்தீப் ஆகியோருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
4) காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் (KUFHK) & காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் ட்ரஸ்ட் ஆகியன இணைந்து, “உணவே மருந்து” எனும் நிகழ்ச்சியை நடத்தி மக்களின் மனதில் மாற்றத்தை விதைத்துள்ளோம்
5) இக்ராஃ கல்விச் சங்கத்துடன் இணைந்து நகரில் ஒரு புது முயற்சியாக, சுற்றுப்புற சூழல் மாசு மற்றும் அதனால் ஏற்படும் சீர்கேடுகள் குறித்தான விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு விளக்கும் வண்ணம் “இயற்கையோடு இணைவோம்” எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தினோம்
6) ஹாங்காங் காயல் நல மன்றத்துடன் இணைந்து ஆண்டுதோறும் கேன்சர் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம்.
7) மருத்துவ பிரிவின் ஓர் திட்டம் தான் இயற்கை வழி உணவு முறைகள் . பொதுமக்கள் இயற்கையான உணவை என்ற உண்ண வேண்டும் என்ற அடிப்படையிலும், இல்லதாய்மார்களுக்கு பொழுதுபோக்கு அம்சத்தை அதிகரிக்கும் வகையிலும், தமது வீடுகளின் மாடி உள்ளிட்ட - கிடைக்கும் சிறு இடங்களில் காய்கறிகள், கீரைகளைப் பயிரிடுவதற்காக, ‘மாடித்தோட்ட பயிற்சி’ நிகழ்ச்சி நடத்தி மக்கள் மத்தியில் மாபெரும் விழிப்புணர்வையும், உற்சாகத்தையும் வளர்த்துள்ளோம்.
8) எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு & பெங்களூரு காயல் நல மன்றம் (KWAB) ஆகியவற்றுடன் இணைந்து, “அரபு வனப்பெழுத்து வரைகலை”-யை (Arabic Calligraphy) நமதூரின் அரபு மத்ரஸாக்களில் பயிலும் மாணவ-மாணவியருக்கு அறிமுகம் செய்து கலைக் கண்காட்சியுடன் கூடிய அறிமுகப் பயிற்சி பட்டறை (Introductory Training Workshop & Art Gallery) ஒன்றை சிறப்புற நடத்தி உள்ளோம். இந்நிகழ்ச்சிக்காக அரும்பாடுபட்ட சகோதரர்கள் அ.ர.ஹபீப் இப்றாஹீம் மற்றும் KMT சுலைமான் ஆகியோர்க்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
9) இக்ரா மற்றும் ஷீபா - நிர்வாக அனுசரணை
10) இமாம் - முஅத்தின்களுக்கான பெருநாள் ஊக்கத்தொகை பங்களிப்பு
- இன்னும் பல....என பட்டியலிட்டு சொல்லலாம்
மேலும் இளைஞர்களின் வேண்டுகோளின் படி இனிவரும் காலங்களில் விளையாட்டு மற்றும் ஆரோக்கியத்தை பேணும் பொருட்டு விளையாட்டிற்கென்று அணிகள் வகுத்து போட்டிகள் நடத்த உள்ளன
இம்மன்றம் ஆரம்பமாக காரண கர்த்தாவாக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், இத்தனை காலம் தன்னுடன் ஒத்தாசையாய் இருந்து ஒத்துழைப்பு நல்கிய அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் மற்றும் உள்ளூர் பிரதிநிதி ஜனாப் SK ஸாலிஹ் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த வருடத்துடன் தனது பதவிக்காலம் நிறைவுறுகிறது . மன்றத்தின் அடுத்த தலைவர் பதவிக்காலம் ஜனவரி 2018 முதல் ஆரம்பமாகிறது. இதுநாள் வரை நீங்கள் எனக்கு வழங்கிய அதே ஆதரவை புதிய தலைவருக்கும் வழங்கிட வேண்டுகிறேன். இனிவரும் காலங்களில் நான் ஆலோசனை குழுவின் மூலம் உங்களுடன் என்றும் இணைந்திருப்பேன். உங்கள் அனைவருக்கும் எனது பிராத்தைனையுடன் கூடிய வாழ்த்துக்கள்...!!! - இவ்வாறு அவர் கூறினார்
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
கத்தார் நாட்டிற்கு வந்துள்ள புதிய உறுப்பினர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.
சிறப்புரை:-
மன்றத்தின் முன்னாள் தலைவரும், ஆலோசனைக்குழு உறுப்பினருமான பாஜுல் கரீம் ஹாஜியார் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். அவர்களின் ஊரைசுருக்கம், தலைவர் அவர்கள் மன்றத்தின் செயல்பாடுகளை சிறப்புற எடுத்துரைத்து நம் யாவரையும் கடந்த காலத்திற்கு அழைத்து சென்று விட்டார். இதுநாள் வரை தாங்கள் எந்தவிதமான விருப்பு வெறுப்பின்றி மக்கள் பணியை மகத்தான முறையில் செய்தீர்கள். பொதுவாழ்வில் தங்களுக்கு உள்ள ஆர்வம் மற்றும் பணி நேர்மை அனைவராலும் பாராட்டத்தக்கது. பல்வேறு இன்னல்களுக்கும் அப்பாற்பட்டு தங்களது பணியை வெகு சிறப்பாக செய்து உள்ளீர்கள். வல்ல இறைவன் உங்களது சேவையை பொருந்திக்கொள்வானாக...! அமீன். மேலும், மன்றத்தின் 2018 - 2019 ஆண்டு பருவத்திற்கான புதிய தலைவராக ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாப் மீரான் அவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களது புதிய பணிசிறக்க தாங்கள் யாவரும் என்றும் உறுதுணையாய் இருப்போம்.
புதிய தலைவர் அறிமுகம்:-
தொடர்ச்சியாக 2018 - 2019 ஆண்டு பருவத்திற்கான புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாப் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
மன்றத்தின் செயல்பாடுகளை புதிய பரிணாமத்தில் பயணிக்க செய்தவர் ஜனாப் யூனுஸ் ஹாஜியார் அவர்கள் என்று மன்ற தலைவரை புகழ்ந்து நன்றி கூறினார். மேலும் , தன் மீது நம்பிக்கை கொண்டு இந்த சீரிய பொறுப்பை எனக்கு அளித்துள்ள்ளீர்கள். இறையருளால் என்றும் பொறுப்புடனும், தொலைநோக்கு சிந்தனையுடனும், சமூக செயல்பாடுகளில் அதிக ஆர்வத்துடன் தான் செயல்பட இறைவன் கிருபை செய்யானாக. உங்கள் யாவரின் ஒத்துழைப்போடு மேலும் பணிகள் பல செய்வோம் என்றார்.
பொருளாளர் உரை:
மன்றப் பொருளாளர் ஹல்லாஜ் , மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையைத் தாக்கல் செய்து, கூட்டத்தின் ஒப்புதலைப் பெற்றார்.
மேலும், நடப்பாண்டில் மன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கும் அதே தருணத்தில், உறுப்பினர்களின் சந்தா நன்கொடை நிதிகள் சென்ற வருடத்தைவிட குறைந்திருப்பது வருத்தமளிக்கிறது . ஆகையால், மன்ற உறுப்பினர்கள் தமது நிலுவைச் சந்தா தொகையை விரைந்து செலுத்திடுமாறும், இயன்றளவு நிலுவையின்றி பார்த்துக்கொள்ளுமாறும், தற்காலத் தேவைகளை அனுசரித்து - நகர்நலப் பணிகளை நிறைவாகச் செய்திடுவதற்காக - தமது சந்தா தொகைகளை கனிசமாக உயர்த்தி வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
நன்றியுரை :-
மன்றத்தின் துணை தலைவர் ஜனாப் செய்யிது முஹிதீன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.
கூட்ட நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு:
மேலும், அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும் சிறப்பான முறையில் நடந்திய ஒருங்கிணைப்பாளர்கள் ZMD முஹம்மத் அப்துல் காதிர் மற்றும் சொளுக்கு முஹம்மது இப்ராஹிம் உள்ளிட்ட அங்கத்தினர் அனைவருக்கும் மன்ற நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. நிறைவாக, ஹாஃபிழ் அமீர் சுல்தான் அவர்களது துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
பின்னர் அனைவருக்கும் மதிய உணவாக மன்ற உறுப்பினர் ஹல்லாஜ் காக்கா அவர்களின் கைவண்ணத்தில் தயாரான பிரியாணி பரிமாறபட்டது.
உணவு ஏற்பட்டு குழு உறுப்பினர்களான அபூபக்கர் ஷிபாய், மஹ்மூத் மானாதம்பி, முஹம்மது அனசுதீன் , நூர்தீன், அப்துல் காதிர் ஜெய்லானி மற்றும் சுலைமான் ஆகியோர் சிறப்பாக செயலாற்றினார்கள். பின்னர் சற்று இளைப்பாறிய பின்னர் அனைவரும் அரட்டையில் ஆழ்ந்தனர்
அஸர் தொழுகை :-
அஸர் தொழுகையை அனைவரும் நிகழ்விடத்திலேயே தொழுதனர் பின்னர் இனிய நினைவலைகளுடன் மன்ற உறுப்பினர்கள் பிரியாவிடைபெற்றுச் சென்றனர். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி – கத்தர் கா.ந.மன்றம்) |