காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“நகர்மன்ற முன்னாள் தலைவர் வழங்கிய இடம் பயோகேஸ் திட்டத்திற்குப் பொருத்தமில்லாததை உணர்த்தும் ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகள்!” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 18ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சிக்கு பயோ காஸ் திட்டம் - ஆகஸ்ட் 8, 2012 தேதிய - அரசாணை (G.O. [Ms.] No.78 Municipal Administration and Water Supply (MA2) Department) மூலம் வழங்கப்பட்டது.
ஆகஸ்ட் 9, 2012 - அதாவது அரசாணை வெளியிடப்பட்ட மறுதினமே - அந்த திட்டத்திற்கு தேவையான இடம் தேடுதலை, ஒரு தினம் கூட வீணடிக்காமல், முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் துவக்கினார்.
மூன்று மாதத்தில், நான்கு புறம்போக்கு நிலங்கள் அடையாளம் காணப்பட்டு - அதில் ஒன்றுக்கான சம்மதமும், அதற்கு அடுத்த ஐந்து மாதங்களில் பெறப்பட்டது உட்பட தொடர்பான செய்திகள் முந்தைய பாகங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தன.
மாநிலத்தின் சில நகராட்சிகளுக்கு பயோ காஸ் திட்டம் வழங்கிய தமிழக முதல்வரின் அறிவிப்பு - அதிகாரப்பூர்வமாக ஏப்ரல் 10, 2013 அன்று வெளியிடப்பட்டு, அடுத்த சில மாதங்களில் - பெருவாரியான நகராட்சிகள் - அதற்கான டெண்டர் அறிவிப்பும் நிறைவு செய்திருந்தன.
ஆனால் - நகரின் அதிகார வர்க்கமும், ஆதிக்க சக்திகளும், நிலப்பிரபுத்துவவாதிகளும் - இந்த அரசு திட்டம், தாங்கள் விரும்பும் தனியார் இடத்திற்கு தான் கொண்டு செல்லப்படவேண்டும் என்ற நோக்கில் - நகர்மன்ற உறுப்பினர்களை கையில் எடுத்து - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் - இத்திட்டத்திற்கான இடம் தருவார் என பணிகளை தாமதப்படுத்தினர்.
அரசாணை வெளியாகி, 21 மாதங்கள் கழித்தே, ஜூலை 3, 2014 அன்று - காயல்பட்டினம் நகராட்சி - இப்பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது.
அந்த அறிவிப்பில் ஜூலை 25, 2014 அன்று பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தேதி வரை - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் மூலம் - இதற்கான இடம், நகராட்சிக்கு வழங்கப்படவில்லை.
நகராட்சி மூலம் வெளியிடப்பட்ட டெண்டர் ஆவணம் - பயோ காஸ் திட்டம் நிறைவேற்றும் அனைத்து நகராட்சிகளுக்கும், சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை அலுவலகத்தால் தயாரிக்கப்பட்ட, பொதுவான ஆவணம் ஒன்றை அடிப்படையாக கொண்டது.
அதில் உள்ள முக்கிய விதிமுறைகள் கீழே வழங்கப்படுகின்றன. அவற்றை கவனமாக படிப்பவர்களுக்கு, பின்னர் - முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் வழங்கிய இடம் - இத்திட்டத்திற்கு எப்படி பொருத்தமற்றது என்பது தெளிவாக புரியும்.
...
2.0 THE TASK TO BE PERFORMED BY THE SUCCESSFUL TENDERER:
...
[2.6] The tenderer shall construct the plant with required preventive measures to control the flies, pest, odor, rodent etc. and by covering the site with natural boundary and aesthetic peripheral.
[2.7] It is the responsibility of the provider to construct permanent boundary wall (5ft concrete wall + 2.5ft steel sheet) which will give aesthetic appearance to the plant.
[2.8] A buffer of not less than 75 ft radius or whatever specified as per TNPCB has to be maintained between the boundary and the plant. Responsibility of maintaining the greening in this buffer utilizing plant’s manure lies with the operator only.
...
[2.11] The tenderer should assist the Municipality to obtain necessary Consent to Establish and Consent to Operate from TNPCB and other clearances from TNEB and other relevant departments.
...
4.0 THE TASK TO BE PERFORMED BY THE MUNICIPALITY:
[4.1] The Municipality would make adequate plot of land, free of any disputes and away from any, water bodies, so as to satisfy the Pollution Control Board Norms.
[4.2] The relevant approvals have to be obtained for construction of the plant in the identified land.
...
[4.5] The street lights to be illuminated by this project have to be identified and sketch / drawing has to be prepared and handed over to the contractor and intimate the same to the Electricity board if necessary.
...
==============================
ஒப்பந்த விதிமுறைகளில் சில (தமிழாக்கம்)
==============================
// இந்த திட்டம் அமையும் இடத்தில் - இயற்கையான எல்லைகள் உருவாக்கப்பட்டு, பூச்சிகள், கொறிக்கும் விலங்குகள் (RODENTS) போன்றவற்றில் இருந்து பாதுகாக்கப்பட்டு பார்வைக்கு அழகாக இருக்கவேண்டும்
// 5 அடி கான்க்ரீட் மதில் மற்றும் 2.5 அடி ஸ்டீல் சீட் பார்வைக்கு பார்வைக்கு அழகான, நிரந்தர மதில் கட்டப்படவேண்டும்
// எல்லை சுவரில் இருந்து பயோ காஸ் தொழிற்சாலைக்கு இடையிலான சுற்றுப்புறத்தில், குறைந்தது 75 அடி அல்லது மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய அளவுகோள் தூரத்திற்கு - காலியிடம் விட வேண்டும்
// காலியிடத்தில் மரங்கள் வளர்க்கப்படவேண்டும்
// ஒப்பந்ததாரர் - மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறவும், மின்வாரிய ஒப்புதல் பெறவும் - ஒத்துழைப்பு வழங்கவேண்டும்
// பிரச்சனைகள் இல்லாத, நீர்த்தேக்கங்கள் இடங்களை தாண்டி உள்ள இடத்தை நகராட்சி வழங்கவேண்டும்
// தேர்வு செய்யப்பட்ட இடத்தில், கட்டுமானங்களை மேற்கொள்ள அனைத்து அனுமதிகளும் பெறப்படவேண்டும்
// இந்த திட்டம் மூலம் மின்சாரம் பெறப்போகிற தெருவிளக்குகள் அடையாளம் காணப்பட்டு, அது குறித்த ஆவணங்கள் ஒப்பந்தத்தாரிடம் வழங்கப்படவேண்டும்
இவை - ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களில் உள்ள சில முக்கிய அம்சங்கள்.
ஒரு விதிமுறைப்படி - எல்லையில் அமைக்கப்படும் மதிலில் இருந்து, பயோ காஸ் தொழிற்சாலை வரையிலான தூரம் குறைந்தது - 75 அடி, அனைத்து திசையிலும் (சுற்றளவு) இருக்கவேண்டும்.
இந்த விதிமுறைப்படி - முன்னாள் நகர்மன்றத்தலைவர் வழங்கிய நிலத்தில் - பாதிக்கு மேற்பட்ட இடம், பயோ காஸ் திட்டத்திற்கே தேவைப்படும் என்பதை காணலாம்.
மற்றொரு விதிமுறைப்படி - திட்டம் அமையும் இடம் - நீர்தேக்கங்களில் இருந்து தூரத்தில் இருக்கவேண்டும்;
ஆனால் - முன்னாள் நகர்மன்றத் தலைவர் வழங்கிய இடம் - நீர்தேக்கத்திற்கு மிக, மிக அருகில் உள்ளது.
மற்றொரு விதிமுறைப்படி - இது சம்பந்தமான அனைத்து அரசுத்துறை அனுமதிகளும் பெறப்படவேண்டும்; ஆனால் - ஒப்பந்தப்புள்ளிகள் தெளிவாக தெரிவித்தும், எவ்வித அனுமதியும் இல்லாமல், இப்பணிகளை காயல்பட்டினம் நகராட்சி துவக்கியது - தீர்ப்பாயத்தின் தடையில் முடிந்தது.
இறுதியாக ஒரு முக்கிய விதிமுறை - இந்த திட்டத்தின் நோக்கம் குறித்தது. இந்த திட்டப்படி - ஊருக்குள் உள்ள, பொது மக்கள் வாழும் இடத்தில் பயோ காஸ் தொழிற்சாலை அமைக்கப்பட்டு, அதன் மூலம் பெறப்படும் மின்சாரம் - அருகாமையில் உள்ள தெருவிளக்குகளுக்கு பயன்படுத்தப்படவேண்டும். அதன் மூலம் நகராட்சிக்கு மின்சார செலவு குறையும்.
ஆனால் - இந்த திட்டம் எதற்காக காயல்பட்டினம் நகராட்சிக்கு, அரசினால் வழங்கப்பட்டதோ, அந்த நோக்கம் சிதைக்கப்பட்டு - ஆதிக்க சக்திகளால் - ஆள் நடமாட்டமில்லாத, எவ்வித வளர்ச்சியும், சாலை வசதியும், தெருக்களும், தெருவிளக்குகளும் இல்லாத ஓர் இடத்திற்க்கு கடத்தி செல்லப்பட்டது.
டெண்டர் திறக்கப்பட்டு - இரண்டு மாதங்கள் கழித்து - முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான், தனக்கு சொந்தமான காயல்பட்டினம் தென் பாகம் கிராமம் சர்வே எண் 278 இடத்தின் ஒரு பகுதியை, தமிழக அரசுக்கு - அக்டோபர் 9, 2014 அன்று - வழங்குகிறார்.
முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் - எந்த அளவிலான இடம் வழங்கினார்; ஏன் அவ்விடம் இத்திட்டங்களுக்கு பொருத்தமில்லை போன்ற விபரங்கள் அடுத்தடுத்து வரும் பாகங்களில் வழங்கப்படும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 8, 2017; 8:30 am]
[#NEPR/2017120801]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |